அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும்.. இப்படியே போனால்.. சீறிய ஜெயக்குமார்.. பரபரப்பு பேட்டி
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் கூட்டணி தர்மத்தை மீறி பேசுகிறார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை திமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரக்கூடியவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவையும் அவ்வப்போது பட்டும் படாமலும் விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். அதன்பிறகு டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அண்ணாமலையும் உடன் இருந்தார்.
அதன்பிறகு அதிமுகவை சீண்டும் வகையில் கருத்து கூறுவதை அண்ணாமலை சற்று தவிர்த்து இருந்தார். இந்தநிலையில், இன்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த அண்ணாமலை, ஊழல் செய்ததாக முன்னாள் முதல் அமைச்சர்கள் சட்டப்படி தண்டிக்கபப்பட்டுள்ளனர். இதனால் தான் தமிழகம் அதிக ஊழல் செய்த மாநிலமாக உள்ளது" என்று அண்ணாமலை கூறினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலை பேசியது அதிமுகவிற்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். ஜெயக்குமார் கூறியதாவது:- அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுகிறார். இதற்கு முன்பாக இருந்தவர்கள் மாநில தலைமை என்ற தகுதிக்கு உரியவர்களாக இருந்தார்கள்.
ஆனால் மாநில தலைவருக்கான தகுதி அண்ணாமலைக்கு இல்லை. திமுகவை விமர்சிப்பதை விட்டு தோழமை கட்சியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அண்ணாமலையின் பேச்சு வன்மையாக கண்டித்தக்கது. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக கூட்டணி தொடரக்கூடாது, பிரதமராக மோடி வரக்கூடாது என்ற நிலையில் அண்ணாமலை போகிறாரா? என்று தான் தெரிகிறது.
இப்போது இருக்கும் சூழலில் கூட்டணி வைத்தால் கூட அதிமுக 30 இடங்களை கைப்பற்றும். 8 மாதம் இருக்கும் நிலையில் திமுக அரசு மீது மேலும் அதிருப்தி ஏற்பட்டு 40 இடங்களையும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நிலை இருக்கும் போது வேண்டும் என்றே வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை உடைக்கும் செயலாக அண்னாமலையின் செயல்பாடு உள்ளது. இவரது எண்ணம் தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு சீட் வரக்கூடாது.
பிரதமராக மோடி வரக்கூடாது என்பதுதான் இவரது செயல்பாடு உள்ளது. கூட்டணியில் இருந்து கொண்டே விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலாக உள்ளது. அண்ணாமலை கர்நாடகா போனாரே வெற்றி பெற்றார்களா? கர்நாடகாவில் 40 சதவீத ஊழல் பற்றி பேசுங்கள். மறைந்த தலைவர் பற்றி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 20 வருஷத்திற்கு பிறகு பாஜகவுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்து இருப்பதற்கு அதிமுகதான் காரணம்.
அதை அண்ணாமலையால் மறுக்க முடியுமா? தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்தால்தான் பாஜகவுக்கு ஒரு அடையாளம் இருக்கும். அந்த அடிப்படையான விஷயத்தை மறந்து இப்படி கூட்டணியை முறிக்கிற செயலாக அண்ணாமலை செயல்படுவதை அமித்ஷாவும் நட்டாவும் கண்டிக்க வேண்டும். கூட்டணி குறித்து நான் சொல்ல தேவையில்லை. உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும் .
அண்ணாமலையின் இந்த பேச்சு எங்கள் கட்சியை விமர்சனம் செய்யும் வகையில் தொடர்ந்தால் கூட்டணி குறித்து நாங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டிய சூழலுக்கு எங்களை அகில இந்திய தலைவர்கள் தள்ள மாட்டாரகள். அண்ணாமலையின் பேச்சால் 2 கோடி தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். அண்ணாமலை முதிர்ச்சி இல்லாமல் தன்னை முன்னிலைப்படுத்த வெண்டும் என்று இதுபோல கருத்துக்கள் வருவதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டியது டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களின் கடமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications