Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்ற மலை உச்சியில் தீபம்.. திமுக இனியாவது நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா? அண்ணாமலை கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ராமா ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மழையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக் கூறி அதற்கு அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சிஐஎஸ்எப் வீரர்கள் உதவியோடு மனுதாரர் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Annamalai DMK Thirupparankundram

கார்த்திகை தீபம்

தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீண்டும் விசாரிப்பார் என உத்தரவிட்டார்கள். இந்த நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இன்று கார்த்திகை தீபத்தை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூரில் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்நிலையில், திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையின் மேற்பகுதியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

திமுக அரசு

நேற்றைய தினம் திமுக அரசு, மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவையும், முருகப் பெருமான் பக்தர்களின் நம்பிக்கையையும் வெளிப்படையாக மீறி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கும் நிலையில், இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது. பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அன்றே, இந்து சமய அறநிலையத் துறையை முறைகேடாகப் பயன்படுத்தி, அவசரமாக மேல்முறையீடு செய்ய வைத்தும், பின்னர் அவ்வழக்கில் அலட்சியம் காட்டி, காலம் தாழ்த்தியும் வந்த திமுக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே பதிலளிக்க முன்வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பக்தர்களின் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் நியமித்த CISF, மற்றும் மாநில காவல்துறை இடையே தேவையற்ற மோதலை உருவாக்கி, இறுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது திமுக அரசு. இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்க வேண்டிய தேவை இருப்பது, அது தர்கா நிர்வாகம் மட்டுமே. ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை.

சிக்கந்தர் தர்கா

ஏனெனில், சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத் தூணில், கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்த வரலாறும், இரு தரப்பு ஒப்பந்தமும் இருப்பதை தர்கா நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது? திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா?" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+