மிரட்டலுக்கெல்லாம் பாஜக பயப்படாது! புகழ்பாடிக் கொண்டிருந்த ’ஜாமீன்’ அமைச்சர்! அண்ணாமலை ஒரே போடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதானி குறித்து பேசினால் வழக்கு தொடருவோம் என்ற உருட்டல் மிரட்டல்கள் எல்லாம், எந்தத் தவறையோ மறைக்க நடக்கும் முயற்சியாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதையும், இதற்கு எல்லாம் தமிழக பாஜக பணிந்து செல்லாது என்பதையும் ஜாமீன் அமைச்சருக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சிறையில் இருந்து வெளிவந்து அமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல், இரவு, பகல் எனக் கால நேரம் பாராமல், தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு, சங்க காலப் பாடல் வரிகளைப் பாடி சமூக வலைத்தளங்களில் புகழ்பாடிக் கொண்டிருந்த ஜாமீன் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கு, தற்போதுதான் தனது துறைகள் குறித்த ஞாபகம் வந்திருக்கிறது.

annamalai senthil balaji chennai

திமுக அரசின் தவறுகளைக் கேள்வி கேட்பவர்களை, 'வழக்கு தொடருவோம்' என்ற பூச்சாண்டி காட்டி மிரட்டும் அதே காலாவதியான தொனியில், தமிழக மின்சார வாரியம், அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய தொகை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

ஒரு வகையில், அதானி நிறுவனத்துக்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படாமல், கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தமிழக மின்சார வாரியத்துடனான வழக்கு காரணமாக அதானி நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் இருந்த கட்டணத்தை, திமுக ஆட்சியில் வழங்கியுள்ளதை ஒப்புக்கொண்ட ஜாமீன் அமைச்சரைப் பாராட்டியே தீர வேண்டும்.

அதானி நிறுவனத்துடன் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று திரும்பத் திரும்பக் கூறும் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி, தனது வார்த்தை விளையாட்டின் மூலம், அதானி நிறுவனத்துடன் தமிழக மின்சார வாரியத்துடனான ஒப்பந்தங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சிகள் பலிக்கவில்லை.

மேல்முறையீட்டு ஆணையத்தின் உத்தரவின்படியே, ரூ.568 கோடி கட்டணம் செலுத்தியதாகக் கூறும் ஜாமீன் அமைச்சர், கடந்த 2019 ஆம் ஆண்டு, மேல்முறையீட்டு ஆணையத்தின் இதே உத்தரவை, தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் 2021 ஆம் ஆண்டு நிராகரித்ததை மறந்து விட்டார்.

அதானி நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக, ரூ.544 கோடி ஒரு முறை வருவாயும், 5.205 கோடி, தாமதக் கட்டணமும் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து பெற்றதாகக் கூடப்பட்டிருப்பதை மறந்து விட்டாரா அல்லது மறைக்க முயற்சிக்கிறாரா? உண்மையில் அதானி நிறுவனத்துக்குச் செலுத்திய மொத்தக் கட்டணம் என்ன என்பதை, ஜாமீன் அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிப்பாரா? அமைச்சர் கூறும் ரூ.568 கோடி என்பதன் கணக்கு விவரங்கள் என்ன?

9. During the year ended 31st March, 2023, the Group had recognized, one time incremental power sale revenue of 544 Crores in Revenue from operations and 205 Crores as late payment surcharge in Other Income (including 502 Crores pertaining to earlier years). The matter relate to favourable order passed by Appellate Tribunal for Electricity ("APTEL") vide its order dated 7th October, 2022 for entitlement of higher PPA tariff of 7.01/kWh as against the reduced tariff of ₹ 5.10/kWh for power supply to Tamilnadu Generation and Distribution Corporation (TANGEDCO) by Kamuthi Solar Power Limited (KSPL) and Ramnad Renewable Energy Limited (RREL) (Since merged with deemed Controlled Subsidiary, Adani Green Energy Twenty Three Limited) against which TANGEDCO had filed an appeal in Hon'ble Supreme Court (SC). The Hon'ble Supreme Court refused the interim relief by its order dated 17th February, 2023 against Appellate Tribunal for Electricity ("APTEL") order.

அதானி நிறுவனத்திடம் தமிழக மின்சார வாரியம் தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையான ரூ.7.01 விலையிலேயே மின்சாரம் வாங்கிக் கொண்டு, அதற்காக, கடந்த நிதியாண்டில் ரூ.99 கோடி கூடுதல் கட்டணம் பெற்றிருப்பதாக, அதானி நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும்போது, எந்த அடிப்படையில், ரூ.5.10 க்கு ஒரு யூனிட் மின்சாரம் என்று திமுக ஆட்சியில் கொள்முதல் செய்வதாகக் குறிப்பிடுகிறார் அமைச்சர்?

7.During the year ended 31 March, 2024, in the matter relating to 72 MW project of Kamuthi Renewable Energy Limited (KREL) (since merged with the Company's Deemed Subsidiary. Adani Green Energy Twenty Three Limited), Tamilnadu Electricity Regulatory Commission ("TNERC") vide its order dated 20th July, 2023 upheld the entitlement of higher PPA tariff of 7.01/kWh as against the reduced tariff of 5.10/kWh for power supply to Tamilnadu Generation and Distribution Corporation (TANGEDCO), TNERC, in its order, held that the Company achieved commissioning as per the power purchase agreement dated 4th July, 2015. Further, KREL, received the incremental revenue of 99 Crores for the past periods upto 31 March, 2023 and also received revenue at PPA tariff of 7.01/kWh for the reporting period 1 April, 2023 to 31th March, 2024. Thus, during the financial year 2023-24, the Company has determined collection as "probable" for "revenue recognition purpose" in line with relevant ind AS 115 Revenue from Contracts. Accordingly, the management has recognized the incremental revenue of ₹99 crores, during the year ended 31" March, 2024 pertaining to past periods and also recognised revenue as per the contracted tariff rate for all subsequent periods.

மத்திய அரசிடம் மட்டுமே சூரிய ஒளி மின்சாரத்திற்கு, ஒரு யூனிட்டுக்கு ९. 2.61 என்ற விலையில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், வேறு தனியார் நிறுவனங்களிடம் திமுக அரசு எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்று கூறிவிட்டு, நடுத்தர மற்றும் நீண்டகால ஒப்பந்தங்கள் அடிப்படையில் மின்சாரம், யூனிட் ஒன்றிற்கு ரூ.3.45 முதல் ரூ.5.31 வரை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தங்கள் மூலமாகக் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர். இந்த தனியார் நிறுவனங்களில் அதானி நிறுவனம் உள்ளதா இல்லையா?

திமுகவின் வரலாறும், ஜாமீன் அமைச்சரின் வரலாறும் உலகறிந்த உண்மை. எனவே, திமுக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கேள்வி எழுவது இயல்பு. அரசின் தவறுகளுக்கு மக்களின் வரிப்பணத்தை எடுத்துச் செலவிடும்போது, மக்கள் நலன் சார்ந்த கேள்விகள் எழத்தான் செய்யும். அதற்குப் பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. அதை விடுத்து, வழக்கு தொடருவோம் என்ற உருட்டல் மிரட்டல்கள் எல்லாம், எந்தத் தவறையோ மறைக்க நடக்கும் முயற்சியாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் என்பதையும், இதற்கு எல்லாம் தமிழக பாஜக பணிந்து செல்லாது என்பதையும் ஜாமீன் அமைச்சருக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்." கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+