அண்ணாமலை கேம் ஸ்டார்ட்.. அமித்ஷாவுக்கு பறந்த “கால்”.. செல்வப்பெருந்தகைக்கு சிக்கல்? ED உள்ளே வருதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையை கைது செய்யும் வகையில் போலீசில் செல்வப்பெருந்தகை புகார் அளித்திருப்பதாக கூறப்படும் நிலையில், செல்வப்பெருந்தகைக்கு எதிராக அமலாக்கத்துறையை இறக்க அண்ணாமலை ஆட்டத்தை தொடங்கி இருப்பதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி இருந்தார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவில் நிறைய ரவுடிகள் உள்ளனர் என்று கூறியிருந்தார். அதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, செல்வப்பெருந்தகையே குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என பேசியது செல்வப்பெருந்தகையை கோபமடையச் செய்தது.

annamalai selvaperunthagai BJP

என்னை ரவுடி எனக் கூறும் அண்ணாமலை எந்த காவல்நிலையில் என்ன வழக்கு என் மீது உள்ளது என நிரூபிக்க முடியுமா? என்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இது கடைசி எச்சரிக்கை. மன்னிப்புக் கேட்காவிட்டால், அவதூறு வழக்கும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்" என்று எச்சரித்திருந்தார்.

இதையடுத்து, செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் குறித்த பட்டியலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார் அண்ணாமலை. கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என மோசமான குற்ற வழக்குகள் அவர் மீது உள்ளன எனக் கூறி இருந்தார்.

குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது உள்ளது. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு. குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? என அண்ணாமலை சீறினார்.

செல்வப்பெருந்தகை லண்டனில் முதலீடு செய்துள்ள பணத்தைப் பற்றிப் பேசுவோம். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் கடைநிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் என்ன வாங்கி வைத்துள்ளார்? அவரது மனைவி பெயரில் என்ன சொத்துகள் உள்ளன? ஆடிட்டர் பாண்டியன் ஏன் கொலை செய்யப்பட்டார்? அந்த வழக்கில் கைமாறிய பணம் எவ்வளவு? என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார் அண்ணாமலை.

மேலும், செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என அண்ணாமலை பதிலடி கொடுத்தார்.

அண்ணாமலை - செல்வப்பெருந்தகை மோதல் தொடர்ந்து வருவது தமிழக அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அண்ணாமலை உருவபொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்து வருகின்றனர். இந்நிலையில், செல்வப்பெருந்தகையிடம் இருந்து, தமிழக காவல்துறை புகார் ஒன்றை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை மன்னிப்புக் கேட்காவிட்டால் எஸ்.சி எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடர்வேன் என செல்வப்பெருந்தகை எச்சரித்த நிலையில், அண்ணாமலை மன்னிப்பு கேட்க மறுத்துள்ளதால், அண்ணாமலை மீது செல்வப்பெருந்தகை போலீசில் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. செல்வப்பெருந்தகையின் புகாரின் பேரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

இதற்கிடையே, செல்வப்பெருந்தகைக்கு எதிராக அண்ணாமலை அதிரடி மூவ்களை செய்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது அண்ணாமலை தான் செல்வப்பெருந்தகை பற்றி கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்ணாமலை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, செல்வப்பெருந்தகை லண்டனில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அமலாக்கத்துறை, செல்வப்பெருந்தகை மீது பாயக்கூடும் என்கிறார்கள்.

அண்ணாமலை மீது தமிழக போலீசில் செல்வப்பெருந்தகை புகார் கொடுத்தால், அதற்கு ஒருபடி மேலே போய் அண்ணாமலை, அமலாக்கத்துறையை களத்தில் இறக்குமாறு அமித் ஷாவுக்கே அழைப்பு மணி அழுத்தி இருப்பதாகக் கூறுகின்றனர் பாஜக தரப்பினர். அண்ணாமலை vs செல்வப்பெருந்தகை மோதலால் வரும் நாட்களில் அமலாக்கத்துறை உள்ளே வரக்கூடும் என்கிறார்கள்.

ஏற்கனவே, அண்ணாமலை - செந்தில் பாலாஜி இடையே வார்த்தை மோதல்கள் நடந்து வந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இன்றளவும் ஜாமீன் கிடைக்காமல் ஜெயிலில் இருந்து வருகிறார். இந்நிலையில், செல்வப்பெருந்தகைக்கு எதிராக அண்ணாமலை கேமை தொடங்கிவிட்டார் என்கிறார்கள் தாமரைக் கட்சியினர். என்ன நடக்கப்போகிறது என்பது போகப்போகத் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+