அண்ணாமலை இருந்தாலே ஸ்டாலினுக்கு லாபம்.. 118 சீட் கூட திமுக ஜெயிக்காது.. விஜயால் உதறுதே: பிரபலம்
சென்னை: வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் புதிதாக வேறு சில கட்சிகள் சேர வாய்ப்புள்ளது.. அதேசமயம், திமுக கூட்டணி தற்போதே பலமாக உள்ளது. மதிமுகவில் நிலவி வந்த சிக்கலும் சரியாகிவிட்டது.. சில சிறிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம்" என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். மேலும் பேட்டியொன்றில் அவர் பேசும்போது, பாஜக அண்ணாமலை பற்றியும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Naadhas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி,அண்ணாமலை விஷயத்தை எளிதாக கடந்து செல்ல முடியாது.. திமுகவுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையை செய்து கொண்டிருக்கிறார்..2023-ல் பாத யாத்திரையை துவங்கியபோதே, இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்.. ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணாவை பற்றி பேசியதால்தான், கூட்டணியே உடைந்தது..

அண்ணாமலை பேச்சுபாத யாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டபோது, கூட்டணியிலிருந்த அதிமுகவும், தன்னுடைய பிரதிநிதியை யாத்திரைக்கு அனுப்பி வைத்தது.. உடனே ராமேஸ்வரத்தில் துவங்கிய யாத்திரையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரும் கலந்துகொண்டார்.
வழக்கமாக, திமுக, அதிமுக இரு கட்சிகளுமே வேறு கட்சிகள் பாதயாத்திரை நடத்தினால், அந்த பக்கமே திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.. அந்நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள மாட்டார்கள்.. ஆனால் பாஜகவுக்காக அதிமுக சென்றது..
முறிந்த கூட்டணி
அடுத்த 4வது நாளே அண்ணாமலை, அண்ணாவை பற்றி சர்ச்சையாக பேசியதுமே கூட்டணி உடைந்தது. அதாவது அண்ணாமலை பேச்சால், கூட்டணி அதன்மூலம் லாபம் திமுகவுக்குதான் போனது.. இத்தனைக்கும் அப்போது அதிமுக-பாஜக எளிதாக வெற்றி பெற்றிருக்கும்.. டெல்லியிலும் என்டிஏ கூட்டணியின் மெஜாரிட்டியையும் குறையாமல் பார்த்து கொண்டிருந்திருப்பார்கள்.. ஆனால் அதை கெடுத்ததே அண்ணாமலைதான்.
அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் கோவையில் அண்ணாமலையே எளிதாகவே அப்போது வெற்றி பெற்றிருப்பார். தெரிந்தோ, தெரியாமலோ திமுகவுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிகளை செய்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
திமுக வெற்றி உறுதி
வரும் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி இருக்கிறதோ, இல்லையோ, அண்ணாமலை தமிழ்நாடு அரசியலில் நீடிக்கப்படும் பட்சத்தில், திமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதை அண்ணாமலை உறுதி செய்வார்.காரணம், அண்ணாமலையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உற்று கவனித்தால், தன் பக்கமே அனைவரின் கவனத்தையும் திருப்பி கொள்கிறார்.
அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் வெளியில் பார்ப்பதற்கு திமுகவை எதிர்ப்பது போன்ற தோற்றத்தில் இருக்கும்.. ஆனால், சற்று உற்று நுட்பமாக கவனித்தால், திமுகவுக்கு லாபம் பயப்பது போலவே இருக்கும்.
அண்ணாமலை தமிழ்நாட்டிலேயே அரசியல் செய்யும் அனுமதிக்கப்படும் பட்சத்தில், வரும் தேர்தலில் திமுகவின் கிட்டத்தட்ட உறுதி என்றே நம்புகிறேன்.
அண்ணாமலை - விஜய்
தேர்தலில் அதிமுக கூட்டணிக்குள் விஜய் வந்தால், மிகப்பெரிய ஆட்சி மாற்றம் நடைபெறும். எனினும், அதிமுக கூட்டணிக்குள் விஜய் சேர்ந்துவிடாமல் இருக்க, அண்ணாமலை மிகப்பெரிய கட்டையை போடுவார், அதாவது தடையை உண்டுபண்ணுவார்.. அதையும் மீறி கூட்டணி என்றால், தன்னுடைய வேலையை அண்ணாமலை ஆரம்பிப்பார்.
இதெல்லாம் திமுகவுக்கும் தெரியும். அதனால்தான் திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விஜய்யை கண்டு கலங்கி போயுள்ளது.. "விஜய் அதிமுகவுடன் போவது வதந்தி" என்று திருமாவளவன் ஏன் சொல்ல வேண்டும்? யார் யாருடன் கூட்டணி வைத்தால் இவருக்கென்ன?
கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யை பாஜக பக்கம் சற்றே உந்தி தள்ளியிருக்கிறது.. அந்தவகையில் விஜய் திமுகவுக்கு தலைவலியாக மட்டுமல்ல, சவாலாகவும் உருவெடுத்துள்ளார்..
சிறிய கட்சிகள்
ஆனால், சீட் விஷயம் கூட்டணி விஷயத்தில் திமுகவுக்கு பிர்ச்சனை வராது, கடந்தமுறை தேர்தலைவிட இந்த முறை தேர்தலில் அதிகமாக சீட்களை கூட்டணிக்கு ஒதுக்கும் என்றே சொல்கிறார்கள்..அதேபோல திமுகவும் இந்த முறை சற்று குறைவாகவே போட்டியிடக்கூடும்.. புதிதாக வேறு சில கட்சகிள் திமுகவில் சேரலாமே தவிர, கூட்டணி பலமாகவே உள்ளது. மதிமுகவில் நிலவி வந்த சிக்கலும் சரியாகிவிட்டது.. சில சிறிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
5 வருடங்கள் ஆட்சியை ஆண்டு முடிக்கும்போது யாராக இருந்தாலும், அதிருப்தி ஓட்டுக்கள் எழத்தான் செய்யும். இப்போதே திமுக ஆட்சி மீது அதிருப்தி உள்ள நிலையில், இன்னும் வரப்போகிற 6 மாதங்களில் இந்த அதிருப்தி அதிகரிக்கவே செய்யும்.
118 சீட்டுகள்
கடந்த 2021-ல் 10 வருடங்களில் அதிமுக ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை இருந்தும்கூட, பாஜகவுடன் கூட்டணி வைத்தும்கூட, ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாத சூழலிலும்கூட, திமுகவால் 130 சீட்தான் வெற்றி பெற முடிந்தது.. மெஜாரிட்டி 118 சீட்டுக்கு, வெறும் 12 சீட்கள்தான் கூடுதலாக பெற முடிந்தது.
எனவே வெற்றி பெறுவது முக்கியமல்ல. அபார வெற்றி பெறணும்.. தனியாகவே நின்று 118 சீட்டுகளை திமுக பெற வேண்டும்.. வரப்போகும் தேர்தலில் கூட்டணி வைத்தால் 118 பெற முடியுமே தவிர தனித்து நின்று 118 திமுக வாங்குமா தெரியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications