ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. புதிய கட்சி தொடங்கப் போகிறாரா, பாஜகவிலேயே தொடரப் போகிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், டெல்லி சென்றுள்ள அண்ணாமலை இதுவரை தமிழ்நாட்டுக்கு திரும்பாதது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக, "மக்கள் சக்தி இயக்கம்" என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டது.

Annamalai BJP Amit Shah Nainar Nagendran

இந்த சூழலில், கடந்த திங்கள்கிழமை மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற அண்ணாமலை, அங்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அண்ணாமலை

இந்த சந்திப்பு தமிழக அரசியல் மட்டுமின்றி, தேசிய அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், கடந்த சில மாதங்களாக அண்ணாமலை கட்சி நிகழ்வுகளில் இருந்து விலகியே இருந்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அவர் எந்த முக்கிய அரசியல் நடவடிக்கையிலும் தீவிரமாக பங்கேற்கவில்லை. டெல்லி சந்திப்பின்போது, பாஜகவில் இருந்து விலகும் முடிவை அண்ணாமலை தேசிய தலைவர் நிதின் நவீனிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு பாஜக

அதோடு, தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனைகள், தேர்தல் தோல்விக்கான காரணங்கள், தன்னை ஓரங்கட்டிய சூழ்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விளக்கும் அறிக்கையையும் கட்சித் தலைமையிடம் சமர்ப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து அண்ணாமலை தரப்பிலோ, பாஜக தலைமையிலோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

பாஜக

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகினால், அது தமிழகத்தில் கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று டெல்லி மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜகவை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற முக்கிய முகமாக அண்ணாமலை உருவெடுத்தார். "என் மண் என் மக்கள்" நடைபயணம், திமுக அரசுக்கு எதிரான தொடர் விமர்சனங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்தது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவர் தனித்த அரசியல் அடையாளத்தை உருவாக்கினார்.

ஜூன் 4-ஆம் தேதி

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு தனிப்பட்ட ஆதரவு வட்டாரம் உருவானது. இதனால், அவர் கட்சியை விட்டு வெளியேறுவது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மதிப்பீடு மேலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் பிறந்தநாளான ஜூன் 4-ஆம் தேதி புதிய அரசியல் அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதாக தெரிகிறது.

அமித் ஷா

பாஜக மேலிடத்தின் வேண்டுகோளை ஏற்று அண்ணாமலை டெல்லியிலேயே தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரது அரசியல் எதிர்காலம் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனையும் டெல்லிக்கு வருமாறு பாஜக மேலிடம் அவசரமாக அழைத்துள்ளது. தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி முரண்பாடுகள் மற்றும் தேர்தல் தோல்வி குறித்து மேலிடம் விரிவாக ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

மாநிலங்களவை உறுப்பினர் பதவி

அண்ணாமலையை சமாதானப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. மாநிலங்களவை உறுப்பினர் பதவி, தேசிய நிர்வாக பொறுப்பு அல்லது மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வழங்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவரை கட்சியிலேயே தக்கவைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இறுதி முடிவு

அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பிறகு, அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்சி அறிவிப்பா, பாஜகவில் தொடர்வதற்கான சமரசமா, அல்லது தேசிய அரசியலில் புதிய பொறுப்பா என்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.
இன்று இரவுக்கு அதற்கான பதில் கிடைக்கும், இன்று அல்லது நாளை அண்ணாமலை சென்னை திரும்புவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+