காலணி அணிந்தபடியே காவடி எடுத்த அண்ணாமலை.. தமிழ் கடவுளை அவமானப்படுத்துகிறார்.. வலுக்கும் கண்டனம்!
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காலணியுடன் காவடி எடுத்து கடவுளை அவமானப்படுத்தியதாக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், ராயக்கோட்டை, தளி, ஓசூர் ஆகிய பகுதிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" அண்மையில் யாத்திரை மேற்கொண்டார். ராயக்கோட்டைக்கு வந்த அண்ணாமலைக்கு மேள தாளங்கள் முழங்க காவடி ஆட்டம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலை காவடி ஆடியவர்களிடம் காவடியை வாங்கி அவரும் அவர்களுடன் சேர்ந்து ஆடினார். அப்போது அண்ணாமலை காலணி அணிந்திருந்தார். காலணி அணிந்தபடி அண்ணாமலை காவடி எடுத்து ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை காலணியுடன் காவடி எடுத்ததற்கு காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்ணாமலை காலணியுடன் காவடி எடுத்து கடவுளை அவமானப்படுத்தியது கண்டனத்துக்கு உரியது, அதற்காக அவர் முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில செயலாளர் சூர்யமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் கடவுளான முருகனை வேல் ஆகவும், மயில் ஆகவும், காவடியாகவும், சேவல் கொடியாகவும் பல்வேறு வடிவத்தில் நாம் வழிபாடு செய்து வருகிறோம். அதில் காவடியில் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, சந்தன காவடி, சர்ப்ப காவடி மற்றும் பல காவடிகள் பக்தியுடன் பக்தர்கள் காவடி எடுத்து இறைவனை வழிபாடு செய்து வருகிறார்கள். தமிழக பாஜக தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்கள் காலில் காலணி அணிந்து காவடி ஆட்டம் ஆடுவது போன்ற போட்டோ வலைதளத்தில் பரவி வருகிறது.

நாம் வணங்கும் தெய்வத்தின் அடையாளத்திற்கு உரிய மதிப்பு கொடுக்காமல் போகிற போக்கில் விளையாட்டு பொருள் வைத்து ஆடுவது போல ஆடுவது இந்து மக்களின் தமிழ் கடவுளான முருகனை அவமானப் படுத்தியது ஆகும். தமிழகம் மற்றும் அண்டை மாநிலதில் இருந்து கூட காலில் செருப்பு அணியாமல் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முருக கோவிலுக்கு கூட முருக பக்தர்கள் பல நாட்கள் விரதம் இருந்து காவடி எடுத்து வருகின்றனர். அவ்வாறு காவடி எடுத்து வரும் பக்தர்கள் தங்களை துன்புறுத்திக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் வெறும் காலிலேயே நடந்து முருகனை வழிபடுகின்ற ஆன்மீக பூமி இது.
ஆன்மீக ஆதரவாளர் போல் பேசுகின்ற அண்ணாமலை அவர்கள் முருக கடவுளை அவமானப்படுத்துவது போலவும் லட்சக்கணக்கான முருக பக்தர்களின் மனது புண்படுவது போலவும் நடந்து கொண்டு இருப்பது வேதனைக்கு உரியது. விரும்பத் தகாதது. காலணி அணிந்துதான் காவடி எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் காவடியை தொடாமல் தவிர்த்து இருக்க வேண்டும்.

சுற்றி இருக்கின்ற மக்களும் கண்டு கொள்ளாமல் ஆடிக்கொண்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. உங்களுடைய செயல் மன்னிக்க முடியாத செயல் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். புண்பட்ட முருக பக்தர்கள் மனதிற்கு ஆறுதலுக்காகவாவது முருக பக்தர்கள் அனைவரிடமும், முருக கடவுளிடமும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேளுங்கள்" என வலியுறுத்தியுள்ளார்.
பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம், "காலணியோடு காவடி எடுக்கிறார். வன்மையாக கண்டிக்கிறோம் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு மிகவும் எல்லோரும் பயபக்தியுடன் செய்யும் சடங்கு இது.. பிஜேபி தமிழ் மக்களின் நம்பிக்கை அவமதிப்பு செய்யலாக கருதவேண்டும்.. அண்ணாமலை கத்துக்குட்டி இப்படி அவமதிப்பு செய்வதை நிறுத்தி கொள்ளவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications