பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமைதான் 2026ல் விஜய்க்கும்.. அண்ணாமலை தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை மட்டுமே பேசி வந்தால், பீகாரில் பிரசாந்த் கிஷோருக்கு ஏற்பட்ட அதே நிலை தான் ஏற்படும் என்பதை உணர வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.

பீகார் மாநிலத்தைப் போன்று 2026-ல் தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும், பீகார் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசுகிறார் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

Annamalai Targets Vijay Says His Path Mirrors Prashant Kishor s Failed Strategy

புதுச்சேரி பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, கலந்தாய்வு கூட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "புதுச்சேரிக்கு எஸ்ஐஆர் பயிற்சி முகாமிற்கு வந்துள்ளேன். பீகாரில் ஒற்றுமை வெற்றியைத் தேடித் தந்துள்ளது. பாஜக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அங்கு கூட்டணி கட்சிகளையும் வெற்றி பெறச் செய்தோம். கூட்டணி கட்சிகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

பீகாரில் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் இழந்துள்ளது. பீகாரில் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு என்று யாத்திரை சென்ற பாதையில் இருந்த எல்லா தொகுதியிலும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. மக்கள் அக்கட்சியை ஏற்கவில்லை. காங்கிரஸ் சிறிய கட்சியாக மாறிவிட்டது. ராகுல் காங்கிரஸ் பொறுப்புக்கு வந்த பிறகு 95 தேர்தல்களில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.

காங்கிரஸ் ஆரோக்கியமான விஷயத்தை சொல்வதற்கு பதில் எதிர்ப்பு அரசியலை மட்டுமே செய்கிறது. விஜய்யும் காங்கிரஸ் போன்று எதிர்க்கின்ற மனப்பக்குவத்தில் உள்ளார். விஜய் எஸ்ஐஆரை எதிர்க்கிறார் என்றால் அதில் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லட்டும். தமிழகம், புதுச்சேரியில் இருந்து குழுவை பீகாருக்கு அனுப்பி விஜய் பார்த்து வரலாம். யாருடைய வாக்குரிமையையாவது அங்கு பறித்துள்ளோமா என்று தெரியவரும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். பீகாரில் மாடல் தேர்தல் பணி ஆற்றியது போல் தமிழக மற்றும் புதுச்சேரியில் அணியாக இணைந்து பணியாற்ற உள்ளோம். பீகார் வெற்றி என்பது வரலாறு காணாத வெற்றி. பீகார் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வயிற்றெரிச்சலில் பேசுகிறார். பீகார் மாடல் போல் கூட்டணி கட்சிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்காமல் அணியாக பணியாற்றி 2026-ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெறுவோம்.

தமிழக மற்றும் புதுச்சேரியில் மக்கள் மனதை வென்ற கட்சியாக, பலம் பொருந்திய கட்சியாக தேசிய ஜனநயாக கூட்டணி உள்ளது. பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக த.வெ.க தலைவர் விஜய் பேசும் எதிர்ப்பு அரசியலை மட்டுமே வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல வேண்டும். கட்சி தொடங்கி விட்டோம் என்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை விஜய் எதிர்க்கிறார்.

தொடர்ந்து எதிர்ப்பு அரசியலை மட்டுமே விஜய் செய்து வந்தால் பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமை தான் ஏற்படும். பீகாரில் பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி துவக்கி 200-க்கும் மேற்பட்ட தொகுதியில் டெபாசிட் இழந்து, வெறும் 3.55% வாக்குகளை மற்றுமே பெற்றுள்ளார். விஜய் கட்சிக்கும் அந்த நிலை ஏற்படும் என்பதை உணர வேண்டும்" என்று பேசியுள்ளார் அண்ணாமலை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+