மேட்டுப்பாளையத்தில் நைட் பார்ட்டி! டிடிவியுடன் பேசும் போதே.. அண்ணாமலைக்கு வந்த ஃபோன் கால்! பரபர பாஜக
சென்னை: கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இடையே நடைபெற்ற ரகசிய சந்திப்பு தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இருவரும் அண்ணாமலையின் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள தனி இல்லத்தில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சாதாரண உரையாடல் இல்லை என்றும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த மீட்டிங் 2026 தேர்தலையொட்டி நடந்த முக்கிய வியூகம் என்கின்றனர்.
அண்ணாமலை சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் மேற்கொண்ட திடீர் டெல்லி பயணம் தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நாளில் ஓபிஎஸ்ஸும் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், டிடிவி தினகரன் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் நிலையில், அதிமுக பிளவு மற்றும் வரவிருக்கும் 2026 தேர்தலை மையப்படுத்தி அண்ணாமலை தனது அரசியல் பாதையை வலுப்படுத்திக் கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அண்ணாமலை
இந்நிலையில், அண்ணாமலையும் டிடிவியும் நேரடியாக சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பில் என்னென்ன விவாதங்கள் நடைபெற்றது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், அரசியல் வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி, அதிமுக பிளவு, பாஜக-அதிமுக கூட்டணியில் மாற்றம், வடதமிழகம் மற்றும் மேற்கு தமிழகம் போன்ற பகுதிகளில் வாக்கு வங்கி, புதிய கூட்டணிகள் உருவாவது போன்ற விஷயங்கள் பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
டிடிவி தினகரன்
இருவரும் தனிப்பட்ட முறையில் சந்திப்பது, தமிழக அரசியலில் புதிய சமிக்ஞையாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின் போது டெல்லியில் இருந்து அண்ணாமலைக்கு ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அழைப்பைப் பெற்ற உடனே அண்ணாமலை திடீரென பேச்சுவார்த்தையை முடித்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இது பாஜக உயர்மட்டத்தில் இதுகுறித்து ஏதேனும் தகவல் சென்றிருக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்த அழைப்பு கூட்டணி அரசியல் தொடர்பானதா, அல்லது இந்த சந்திப்பு குறித்து திடீர் ஆலோசனை தேவையா என்ற விவகாரம் பாஜக வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.
மேட்டுப்பாளையம் மீட்டிங்
டிடிவி தினகரன் தற்போது அமமுக கட்சியை சமீபமாக வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். 2026 தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனுவும் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் ஓ. பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை சந்தித்திருந்தார். உடனே சில நாட்களில் தினகரனையும் சந்தித்திருப்பதும், அண்ணாமலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதும் பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.
டெல்லி அழைப்பு
இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில், இந்த ரகசிய சந்திப்பு தமிழகத்தில் வரவிருக்கும் கூட்டணி தொடர்பான முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை தொடர்ந்து டெல்லி தலைமையை சந்தித்து வரும் நிலையில் தேசிய அளவிலான பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் தேசிய அளவிலான பதவி தனக்கு வேண்டாம் எனவும், மாநில அரசியலில் தனது கவனத்தை செலுத்த இருப்பதாக தலைமையிடம் அண்ணாமலை சொன்னதாகவும் அவரது ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.
-
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
கோவை வந்த மோடியை வரவேற்க அண்ணாமலை வராதது ஏன்? புது காரணம் சொன்ன நயினார் நாகேந்திரன் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications