சுதாரிச்சு களத்தில் இறங்குங்க விஜய்.. தலைக்கு மேல் கத்தி.. அண்ணாமலை வார்னிங்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் வேதனையடையும் வகையில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெண் மாவட்ட ஆட்சியரிடம், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விஜய் மௌனம் கலைக்க வேண்டும். அவர் சுதாரிக்கவில்லை என்றால் கடுமையான பிரச்சனைகள் ஏற்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மாவட்டம், கணியூர் அருகே சேடர்பாளையம் கிராமத்தில் பட்டத்தரசி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வீ தி லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பிய புகார் அதிர்ச்சி தருகிறது. இந்த விவகாரம் ஒரு பெரிய மர்ம புதிராக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

annamalai-warned-vijay-over-kallakurichi-mla-issue

மக்களுக்கு அவநம்பிக்கை

இந்த சம்பவத்துக்கு பிறகு புகார் கூறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதை பார்க்கிறோம். பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியராக இருப்பதே பெருமை. அவருக்கு அனைவரும் ஆதரவளிப்பது அவசியம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி யே அவரை அச்சுறுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சியரிடம் ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ யாரேனும் பிரச்சனை ஏற்படுத்தியிருந்தால், முதலமைச்சர் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மோசமான குறுஞ்செய்தி அனுப்பினாரா இல்லையா என்பது எளிய கேள்வி. அனுப்பியிருந்தால் நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில் அதை வெளிப்படையாக சொல்லுங்கள். எல்லா விஷயங்களையும் மூடி மறைத்தால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படும். ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கமும் இது குறித்து மௌனம் கலைக்க வேண்டும். மாற்றத்தை விரும்பி 35 சதவீத மக்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களித்துள்ளனர்.

விஜய் சுதாரிக்க வேண்டும்

இதன் மூலம் தான் தவெக ஆட்சியில் அமர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி இரண்டு நாட்களில் 441 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்துள்ளது. தீபாவளி அன்று 15 முதல் 17 கொலைகள் வரை நடந்துள்ளன. முந்தைய ஆட்சியை குறை சொல்வதை விட்டுவிட்டு, காவல்துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவது அவசியம். தீபாவளிக்கு முன்பே ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம். சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

உள்துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் விஜய் சுதாரித்து வேகமாக களத்தில் இறங்க வேண்டும். ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் முடிந்துள்ளது. தவெக ஆட்சியின் நிறை, குறைகள் குறித்து ஓராண்டு நிறைவடைந்த பிறகே முழுமையாக பேசுவோம். அதற்குள் எதிர்க்கட்சிகள் பேரம் பேசி எம்எல்ஏக்களை இழுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்தால், அது எதிர்க்கட்சிகளுக்கே பின்னடைவாக அமையும். ஏற்கனவே இடைத்தேர்தல் குழப்பங்கள் உள்ளது. மக்கள் வாக்களித்த ஆட்சிக்கு ஓராண்டு காலமாவது தார்மீக அவகாசம் வழங்க வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+