அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன?
சென்னை: அண்மையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் திடீர் டெல்லி பயணத்தின் பின்னணி குறித்த கேள்விகள் எழுந்தன. அதேபோல் டெல்லி சென்றுவிட்ட வந்த பின், அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கிறார்.
இதற்கு முன் கட்சிப் பணிகளிலும், தேர்தல் பணிகளிலும் அண்ணாமலை பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்தும் கூட விலகி கொண்டார். இதனால் டெல்லியில் நடந்தது என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசாரிக்கையில், பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அப்போது தமிழக சட்டசபைத் தேர்தல் தொடர்பாக மத்திய உளவுத்துறை ஒரு ரிப்போர்ட்டை வழங்கி இருக்கிறது. அதில் பாஜகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தலைமை, தமிழ்நாட்டில் பெரிதாக ஆர்வம் காட்ட விரும்பவில்லை. இதன் காரணமாகவே பிரதமர் மோடி மார்ச் மாதத்தில் 3 முறை வந்த போதும், ஏப்ரல் மாதத்தில் 1 முறை மட்டும் வர திட்டமிட்டுள்ளார்.
அதிலும் பாஜக 1 தொகுதியில் மட்டும் போட்டியிடும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வர முடியாது என்றும் பிரதமர் மோடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே கன்னியாகுமரியில் 4 தொகுதிகள் பாஜக போட்டியிடுகிறது. அங்கு ரோடு ஷோ வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக பாஜக தரப்பில் கூறிவிட்டு தேதியை பெற்றுள்ளனர்.
தற்போதைய சூழலில் நாகர்கோவில் மற்றும் ராசிபுரம் ஆகிய தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவாக இருக்கின்றன. சாத்தூர், மொடக்குறிச்சி, அவிநாசி, கோவை வடக்கு, விளவங்கோடு, திருப்பூர் தெற்கு, மயிலாப்பூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் கொஞ்சம் சவால் கொடுக்கிறோம். மீதமுள்ள தொகுதிகளில் பெரிய மாற்றம் இருக்காது என்று அண்ணாமலையிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளை விட குறைந்த தொகுதிகளில் வென்றால் சரியாக இருக்காது. அது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு சிக்கலாகிவிடும். இதனால் பிரச்சாரத்தை தீவிரப்படுத்துங்கள் என்று பேசி இருக்கிறார். இதனாலேயே அண்ணாமலைக்கு பாஜக சார்பாக ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
-
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications