தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்.. அண்ணாமலை விரைவில் ம.பி செல்வார்.. எஸ்.வி.சேகர் ஆரூடம்!
சென்னை: விரைவில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார், மத்திய பிரதேசத்திற்கு செல்வார் எனக் கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலாகவே அவர் யாரையும் அரவணைத்து செல்வதில்லை என முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வந்தார். அண்மைக்காலமாக அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது எனப் பேசி வருகிறார் எஸ்.வி.சேகர்.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி.சேகர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ளது, இதனால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்த கேள்விக்கு, "இதனால் மத்தியில் உள்ள மோடி அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி அவர்கள் ஹாட்ரிக் பிரதமராக வருவது உறுதி. ஏனென்றால் இந்த கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழ்நாடு பெரிய அளவில் பாஜகவுக்கு உதவி செய்யப்போவது இல்லை." எனப் பதில் அளித்துள்ளார்.
மேலும் பேசிய எஸ்.வி.சேகர், "இந்த கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என அதிமுக தரப்பில் இருந்து பாஜக தலைமைக்கு சொல்லி உள்ளனர். அண்ணாமலை கூட்டணி தலைவர்களை தவறாக விமர்சிக்கிறார் என்ற ஒரு காரணத்தைத் தான் கூறி உள்ளனர். அண்ணாமலைக்கு அரசியல் முதிர்ச்சியோ, அனுபவமோ இல்லாததால் அவ்வாறு பேசி உள்ளார். அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாடு தலைவராக அமர்த்தியதுதான் தவறு.
அதை பாஜக மேலிடம் உணரும். மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் போது அந்த மாநில பார்வையாளராக அண்ணாமலையை மாற்றிவிடுவார்கள். விரைவில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார். அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக பூஜ்ஜியமாகத்தான் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
அண்ணாமலையை அழைத்து பாஜக மேலிடம் கண்டிப்பாக திட்டி இருப்பார்கள். நம்மிடம் சொல்வாரா அவர்? இந்த அழகில் அவர் கமல்ஹாசனுக்கு அட்வைஸ் செய்கிறார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துவிட்டு ஓடிவந்து அரசியலில் சேர்ந்ததற்கு, இவர் ஐபிஎஸ் படிக்காமல் இருந்திருந்தால் திறமை வாய்ந்த இன்னொரு இளைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கும். அதுவும் போச்சு, இதுவும் போச்சு." எனத் தெரிவித்துள்ளார்.
-
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா -
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு












Click it and Unblock the Notifications