அண்ணாமலை கையில் புதிய அஸ்திரம்? அமித் ஷா தரும் சர்ப்ரைஸ் போஸ்ட்! புதுச்சேரியில் இன்று இதான் பிளான்
சென்னை: 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, இன்று காலை காரைக்கால் வருகை வந்துள்ளார்.. அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதுடன், புதுச்சேரி மாநில பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை இன்று வழங்குகிறார் அமித்ஷா. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமித்ஷாவின் இந்த பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது..
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு தனி விமானத்தில் டெல்லியிலிருந்து திருச்சி வந்தடைந்தார்.. விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்..

அங்கிருந்து கார் மூலம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் விடுதிக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்ற பாஜக மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்..
அமித்ஷா - பியூஷ் கோயல்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம், தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் உத்திகள் பற்றி விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன..
கூட்டத்தில் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக மேலிடப் பார்வையாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி மற்றும் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக தேர்தல் முன்னேற்றத் திட்டங்களை வடிவமைத்தனர்..
காரைக்கால் - புதுச்சேரிதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் நேற்றிரவு இரவு தங்கிய அமித்ஷா, இன்று காலை 11 மணியளவில் நட்சத்திர விடுதியில் இருந்து கிளம்பிய அவருக்கு, மேளதாளங்கள் முழங்க வழிநெடுக பாஜகவினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு 11.15 மணிக்கு சென்றடைந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டார். அங்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்ற உள்ளார்.. மேலும், , புதுச்சேரி மாநில பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனையும் வழங்குகிறார்..
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமூக வலைதளத்தில், "புதுச்சேரியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான NDA கூட்டணியின் தேர்தல் பணிகளைத் தொடங்குவதற்காக வருகை தந்த இந்தியாவின் அரசியல் சாணக்கியர் அமித் ஷாவை வரவேற்றதில் மகிழ்ச்சி" என பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. .
அண்ணாமலைக்கு புதிய பதவி?
சமீபத்தில் தமிழக பாஜகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.. நீண்டகாலம் அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ விநாயகம் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவரது பதவிக்கு பிரஷோபக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.. கேசவ விநாயகத்திற்கு RSS இயக்கத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் 'சத்பவன' என்ற புதிய பொறுப்பு வழங்கப்பட்டு, உள்கட்சிப் பூசல்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் அதிருப்தி காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு பேசப்படுகிறது..
இந்தச் சூழலில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் மாநில அளவிலான சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்பு பரவி வருகிறது.. கடந்த காலத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தல் பணிகளில் இருந்து விலகியிருந்த அவர், இந்த புதிய பொறுப்பை ஏற்கும் போது, மாநில அளவில் பாஜக தேர்தல் உத்திகளை நேரடியாக மேற்பார்வை செய்வார்..
தமிழக பாஜக
அண்ணாமலை முன்னதாக பெற்ற அனுபவமும், வாக்குகளின் நிலையை வலுப்படுத்தும் திறனும், அவரை இந்த புதிய பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவராக காட்டுகிறது.. இதனால் தொண்டர்கள் மற்றும் கட்சித் தூதர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பும் கலந்துரையாடல்களும் உருவாகியுள்ளது.. சில வட்டாரங்களில் இதை "பாஜக மாநில வலிமையை மீட்டெடுக்கும் வாய்ப்பு" எனவும் குறிப்பிடுகின்றனர்..
மொத்தமாக, அமித் ஷாவின் வருகை, அமைப்புச் செயலாளர் மாற்றங்கள் மற்றும் அண்ணாமலைக்கு வழங்கப்படவிருக்கும் புதிய பொறுப்பு, 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டத்தில் பாஜக கூட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.. தமிழக அரசியலில் வாக்கு நிலைகள், கட்சி அமைப்பு மற்றும் தேர்தல் உத்திகள் மீது இந்த வருகை நெருக்கடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன..
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
ஆதவ் அர்ஜுனா மைத்துநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு ரூ 328 கோடி சொத்தா? வியக்க வைக்கும் வேட்புமனு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications