3 வது திருமணம் செய்த அன்னபூரணி அரசு அம்மா! ஜோடியாக ஆசீர்வாதம்.. பரவசமடைந்த பக்தர்கள்
சென்னை: தன்னை தானே கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் பிரபல பெண் சாமியார் அன்னபூரணி அரசு, இன்று 3வது திருமணம் செய்து கொண்டார். ஆன்மீகத்திற்கு தன்னை அர்ப்பணித்த ரோகித் என்பவரை திருமணம் செய்துள்ளார். இனி இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக அருள் வழங்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
பிரபல சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரனி. இவர் தனக்கு தானே கோவில் கட்டி, அந்த கோவிலில் நான் தான் கடவுள் என்று கூறி அருள்பாலித்து வருகிறார். ஏற்கனவே முதல் கணவரை பிரிந்த இவர் அரசு என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அரசு இறந்துவிட்டதால் அவருக்கு சிலை அமைத்து அவரை அன்னபூரனி வழிபட்டு வந்தார். இந்த நிலையில் 3வதாக ரோகித் என்பவரை அன்னபூரனி திருமணம் செய்துள்ளார். தெய்வீக திருமணம் என பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் "அன்னபூரணி அரசு அம்மன்" என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார் அன்னபூரணி. தன்னை கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு அன்னபூரணி அரசு அம்மனாக தன்னை மாற்றிக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு தனது கணவர் மற்றும் 14 வயது பெண் குழந்தையை பிரிந்துவிட்டு காதலரான அரசு என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
இதில் கணவர் அரசுவும் உயிரிழந்து விட்டதால், அவரது நினைவாக அரசுவின் உருவ சிலையை வடிவமைத்து கடவுளாக வழிபட்டு வந்தார். இதன் பிறகு தான் செங்கல்பட்டில் 'அன்னபூரணி அரசு அம்மன்' என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தினார். மேலும் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி வந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அன்னபூரணி தனது ஆன்மிக சொற்பொழிவை யூடியூப் மூலமாக நடத்தி வந்தார். மேலும் திருவண்ணாமலையில் கீழ்பென்னாத்தூரில் ராஜா தோப்பு பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி அங்கு ஆசிரமம் அமைத்தார். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த இடம் தேடி அலைய வேண்டியிருக்கிறது. இதனால் என்னிடம் இருந்த பணத்தை வைத்து இங்கு தான் இடம் வாங்க முடிந்தது. இனிமேல் இங்கு தான் ஆன்மிக பணியை தொடருவேன்.
யாருக்கும் அருள்வாக்கு சொல்ல மாட்டேன். ஆன்மிகத்தை மட்டும் தான் சொல்வேன் என்று அன்ன்பூரணி கூறியிருந்தார். மேலும் அரசு என் கடவுள் என்று கூறி அவருக்கு சிலை அமைத்ததாகவும் கூறினார். தொடர்ந்து நான் சாமியார் கிடையாது கடவுள் என்று தனக்கு தானே கோவிலை கட்டினார். இந்த கோவிலில் சாமியாக அவரது சிலையையே வடிவமைத்தார். மேலும் பூஜை செய்வது அனைத்தும் தனக்கே செய்துகொண்டார்.
குறிப்பாக இவர் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்தில், அன்னபூரணியே அம்மன் போல சேலை, அணிகலன்கள் அணிந்து கொண்டு அம்மனாக காட்சியளித்தார். அபிஷேகமும் அம்மன் வேடமிட்டிருந்த அன்னபூரணிக்கே செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிலும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு அன்னபூரணி அம்மாவிடம் ஆசி பெற்றனர். ஏராளமான பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு பாத பூஜை செய்து காலை தொட்டு சூடம் ஏற்றி வழிபட்டனர்.
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, "தான் ரோகித் என்பவரை திருமணம் செய்யப் போவதாக சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார். எனது கணவர் அரசு என்பவரை திருமணம் செய்த அதே 28 ஆம் தேதி தான் இந்த திருமணம் நடக்க இருக்கிறது. ரோகித் என்பவரும் ஆன்மிகத்துக்காக தன்னையே அர்பணித்து கொண்டவர் தான்.
மேலும் அன்றைய தினம் அரசுவின் அடுத்த பரிணாம நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆசிர்வாதம் பெற்று செல்லுங்கள்" என்று கூறியிருந்தார். அதன்படி இன்று அன்னபூரணி - ரோகித் திருமணம் நடைபெற்றது. இது அன்னபூரணிக்கு 3 வது திருமணம் ஆகும். தெய்வீக திருமணம் என்ற பெயரில் திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரில் இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையில், இனி இவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications