யூடியூப் வீடியோவில் அன்னபூரணி.. பார்த்து பரவச நிலை அடைந்த பக்தர்கள்.. புது அவதாரம்!
சென்னை: யூடியூப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை கனவு, அதிலிருந்து விழித்துக் கொள்ளுங்கள் என அன்னபூரணி சொற்பொழிவாற்ற, அதற்கு பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர்.
Recommended Video
கடந்த சில தினங்களாக டிரென்டிங்கில் இருந்த அன்னபூரணி தனக்கென பேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களை தொடங்கியுள்ளார். இதில் இவரது பக்தர்கள் சப்ஸ்கிரைப் செய்யாவிட்டாலும் கிண்டல் செய்வதற்காகவே நிறைய பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள்.
அந்த வகையில் இவர் நேற்று புத்தாண்டையொட்டி ஒரு ஆன்மீக சொற்பொழிவை ஆற்றியுள்ளார். அதில் அவர் கூறுகையில் நான் என்ன சொல்ல வரேன் என்பதை உணர்ந்து எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

உண்மை
ஒரு கனவு காணும் போது அது கனவு என்று உங்களுக்குத் தெரியாது. அது உண்மையை போலவே தெரியும். ஒரு இன்பமான கனவைக் கண்டால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் ஒரு துன்பமான கனவைக் கண்டால் வருத்தமாக இருப்பீர்கள். ஏனெனில் கனவு என்பது வெறும் வார்த்தை ஆகவும் படமாகவும் இல்லாமல் உங்களுடைய உணர்வோடு சம்பந்தப்பட்ட ஒன்றாக உங்களை உருமாற்ற கூடிய ஒன்றாக இருக்கிறது.

உண்மை
அந்த அளவுக்கு அது தத்ரூபமாக உண்மையாக இருக்கிறது. கனவு தானே ஏன் நேர்ல நம்ம பயப்படனும் அப்படின்னா அந்த தன்மை அந்த அளவுக்கு உண்மையானதாக இருக்கிறது. இதேபோல் இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும் ஒரு கனவுதான். கனவு எப்படி தூக்கத்தில் வருகிறதோ அதுபோல் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையானது உங்கள் மனதாலும் அறிவாலும் உருவாக்கப்பட்டது.

வட்டம்
உலக விஷயங்கள் தெரிய ஆரம்பித்தவுடனே ஒவ்வொருவரும் உங்களுக்கென்று தனி உலகத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் மனம் சார்ந்த விஷயங்கள் ஆகும் உங்கள் அறிவு சார்ந்த விஷயங்கள் ஆகும் உங்களுக்கு என்ன ஒரு உலகத்தை உருவாக்கி கிட்டு அதிலேயே உழன்று கொண்டு அதில் ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டு வருகிறீர்கள்.

சத்தியமா
இதுதான் எதார்த்தமா? இதுதான் சத்தியமா? இதுதான் உண்மையான வாழ்க்கையா? எனக் கேட்டால் இது உண்மையான வாழ்க்கை இல்லை. எப்படி ஒரு கனவு கண்ட மனிதன் விழித்து கொண்டு எழுந்து இருக்கிறாரோ அதுபோல் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது விழித்து இருக்கிறீர்களோ அப்பொழுது தான் தெரியும் நாம் இவ்வளவு நாள் என்ன வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று! என இப்படி மெதுவாக நிறுத்தி நிதானமாக அன்னபூரணி சில விஷயங்களை சொல்லியுள்ளார்.

சப்ஸ்கிரைபர்
இதற்கு நிறைய பேர் பல கமென்ட்டுகளை போட்டுள்ளார்கள். அவற்றில் இருந்து சில உங்களுக்காக: நல்ல கருத்து. ஒருவரை பற்றி தெரிந்து கொள்ளாமல் பேசுவதற்கு இந்த மக்கள் வெட்கப்பட வேண்டும். அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு உண்மை தெரியாமல் மனதில் தோன்றியதை விளம்பரத்திற்காக பேசும் லட்சுமி ராமகிருஷ்ணன் வெட்கப்பட வேண்டும் என்கிறார் இந்த சப்ஸ்கிரைபர்.

குருமாதா
என்ன நடந்தாலும் இந்த ஜென்மத்தில் நீங்கள்தான் எங்கள் குருமாதா. நன்றி அம்மா. அம்மா... உலகத்தையே ஆட்டி வைக்கும் தாயே.. இந்த கொரோனா வில் இருந்து மக்களை காப்பாற்றுங்கள் அம்மா.. உங்களை நம்பியே இருக்கிறோம் நாங்கள்.. உங்கள் குழந்தைகள். அம்மா அவர்கள் இந்த புத்தாண்டு முதல் இன்னும் நிறைய தத்துவங்கள் கொண்ட காணொளி வெளியிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஆண்டவன் அருள் கிடைக்க அனைவரையும் ஆசிர்வதித்து அருள் தர வேண்டும் மிக்க நன்றி. அம்மா என் அன்பு அம்மா கனவு உலகில் வாழ்ந்த என்னை நிகழ்காலத்தில் வாழவைக்கும் என் அன்னைக்கு கோடானகோடி நன்றிகள். ஒரு நாள் நான் உங்கள் கால்களில் விழுவேன். உங்கள் ஆசி பெறுவேன், என பல சப்ஸ்கிரைபர்கள் அம்மா.. அம்மா.. ஆதிபராசக்தி தாயே என உருகியுள்ளார்கள்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications