Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லிஸ்டில் இணையும் அடுத்த நடிகை.. கணவர் போட்டோஸ் டெலிட்.. விவாகரத்து செய்யும் சீரியல் பிரபலம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகம் இந்த ஆண்டு தொடர்ந்து பல அதிர்ச்சிகளை சந்தித்து வருகிறது. முன்னணி நடிகர்கள், பிரபலமான பாடகர்கள் என பலரின் விவாகரத்துச் செய்திகள் தலைப்புச் செய்திகளான நிலையில், தற்போது பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல நடிகையின் திருமண வாழ்க்கை சிக்கலில்?

தொலைக்காட்சி தொடர்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமான அந்த நடிகை, நிஜ வாழ்க்கையில் தனது திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாகவும், சக நடிகர்களுடன் பேசுவதைத் தவிர்த்தும், ஊடக நிகழ்வுகளில் பங்கேற்காமல் விலகியும், வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருப்பதாகவும், பெரிதாக வெளியே தலைகாட்டாமல் தனிமையை பேணி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

actor jayam ravi aarthi

அவரது சமூக ஊடக பதிவுகளில் கணவரின் புகைப்படங்கள் திடீரென காணாமல் போனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல போட்டோக்களை அவர் டெலிட் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. முன்பு ஒவ்வொரு பண்டிகை மற்றும் திருமண ஆண்டுவிழாவையும் சமூக ஊடகங்களில் கொண்டாடி வந்த இந்த ஜோடி, இப்போது முற்றிலும் அமைதியாகிவிட்டது. சமீபத்திய அவரது சமூக ஊடக பதிவுகள் பெரும்பாலும் தனியாக இருப்பது, ஜிம்மிற்கு செல்வது, கோவிலுக்கு செல்வது என்று மட்டுமே உள்ளன. ஆனால் அதுவும் ஜோடியாக இல்லாமல் தனியாகவே இருக்கிறது.

இதுகுறித்து சின்னத்திரை உலகை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில், "அவர் கொஞ்ச காலமாக தனியாகத்தான் இருக்கிறார். அவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்ற பேச்சு ஏற்கனவே இருந்தது. ஆனால் இப்போது அது முன்பை விட தீவிரமாக உள்ளது, அவர் தனது கணவரைப் பற்றி மிகவும் பெருமையாக பேசுவார். ஆனால் இப்போது ஏதோ மாறிவிட்டது போல் தெரிகிறது, நடிகை தனது வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். மேலும் எப்போதும் போல் திரையில் தோன்றினாலும், தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் அவர் கடுமையாக கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்," என்றார்.

மௌனம் காக்கும் நடிகை

சுவாரஸ்யமாக, அந்த நடிகை இந்த வதந்திகளை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை. அவர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார். இது மேலும் பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாகவும், தற்போதுள்ள தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் பணிகளை முடித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதிர்ச்சியில் ரசிகர்கள்

திரையில் நடிகையின் நடிப்பை போலவே, நிஜ வாழ்க்கையிலும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் ரசித்தனர். ஆனால் தற்போது இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "-2024- 2025ஆம் ஆண்டு திரையுலகிற்கு ஒரு பிரேக்-அப் சீசனாக மாறிவிட்டதோ?" என்று சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏன் இந்த வருடம் எல்லோரும் பிரேக்-அப் செய்கிறார்கள்? என்று ரசிகர்கள் கேட்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. .

தொடரும் விவாகரத்து

தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து பலரும் விவாகரத்து செய்து வருகின்றனர். முன்னணி நடிகர், நடிகைகள், பல ஆண்டுகளாக திருமண உறவில் இருந்தவர்கள் கூட விவாகரத்து செய்ய தொடங்கி உள்ளனர். சினிமா திரை உலகை இந்த தொடர் சம்பவங்கள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.

சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது நீண்ட கால காதலி, மனைவி சைந்தவியை விவாகரத்து செய்தார். இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் மனஸ்தாபம் காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். அதேபோல் இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது.

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி இதேபோல் விவாகரத்து செய்தார். இது போக நடிகை சமந்தா - நாக சைதன்யா, நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து விவாகரத்து செய்துள்ளனர். அதேபோல் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+