வங்க கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.. புயலாக மாற சான்ஸ்! வானிலை மைய இயக்குநர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்கனவே இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி உள்ள நிலையில் வரும் 23 ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. நேற்று சென்னையில் இரவு தொடங்கி காலை வரை மழை வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 26 செமீ மழை பதிவானது. சைதாப்பேட்டை, வடபழனி என சென்னையில் பரவலாக மழை பெய்தது.

Another low-pressure area to form in the Bay of Bengal potential for it to develop into a cyclone - Durai s interview

கூடுதல் மழை பெய்யலாம்

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காறழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பருமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 12 சதவீதம் கூடுதலாகவே பெய்துள்ளது. அடுத்த நவம்பர் மாதத்தில் பருமழை மேலும் அதிகரிக்கும். இந்த மாதத்தை விட நவம்பர் மாதத்தில் கூடுதல் மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த மாதத்தில் தான் புயல்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

புயலாக மாற வாய்ப்பு

ஏற்கனவே வங்கக் கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் பெரிய பாதிப்பு இல்லை. தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வங்கக் கடலில் வரும் 23 ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெற்று பயலாக கூட மாற வாய்ப்பு உள்ளது. எனினும் அடுத்தடுத்த நாட்களில் தான் இது பற்றி தெளிவாக கூற முடியும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றால், வரும் 25 ஆம் தேதி வாக்கில் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.." என்று கூறினார்.

மிக கனமழை பெய்யக்கூடும்

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் வரும் 25 ஆம் தேதி தமிழகத்தில், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

26 ஆம் தேதி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+