சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா ஹாட்ஸ்பாட்டாகிறதா சென்னை ஸ்டார் ஹோட்டல்கள்? ஐடிசி சோழாவையடுத்து லீலா பேலசில் 20 பேர் பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள ஒரு ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு நட்சத்திர ஹோட்டலான லீலா பேலசில் 20 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கொரோனா கிளஸ்டராக மாறி வருகிறதா என்ற கேள்வியை இந்த சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலின் 20 ஊழியர்களுக்கு, டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அது உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

Another luxury hotel in Chennai turns Covid hotspot

கொரோனா உறுதி செய்யப்பட்டதில், பலர் அறிகுறியற்றவர்கள் என்று கூறப்படுகிறது.

டிசம்பர் 15 முதல் இதுவரை, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவின் ஐடிசி கிராண்ட் சோலாவைச் சேர்ந்த 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

Recommended Video

    சென்னை: நட்சத்திர விடுதிகளில் ‘சுற்றும்’ கொரோனா.. ஊழியர்களை ‘சோதிக்கும்’ மாநகராட்சி..!

    இதையடுத்துதான் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் ஊழியர்கள் பரிசோதனைகள் நடத்த ஆரம்பித்தனர். அப்போதுதான் லீலா பேலஸ் ஹோட்டலில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் விரைவில் இந்தியாவில் தொடக்கம்... பிரதமர் மோடி அறிவிப்புஉலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் விரைவில் இந்தியாவில் தொடக்கம்... பிரதமர் மோடி அறிவிப்பு

    இதைத் தொடர்ந்து, ஹோட்டலில் உள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் பரிசோதனையை மேற்கொள்ள பெருநகர் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஐ.டி.சி கிராண்ட் சோழா இதுபற்றி கூறுகையில், "எங்கள் பணியாளர்களில் பெரும்பாலோர் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள், மேலும் ஏற்கனவே ஹோட்டலில் இருந்தவர்கள் அங்கேயிருந்து வெளியேறவில்லை, எனவே மற்றவர்களுடன் இவர்கள் தொடர்பு கொள்ளவில்லை." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Two days after reports of about 85 people testing positive at a luxury hotel in Chennai came to light, another luxury hotel has turned into a Covid cluster with 20 of its employees contracting the virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X