ஒன்னு போனா என்ன? அடுத்தது வருது.. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை.. எங்கு தெரியுமா?
தமிழகத்தில் மொத்தம் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மொத்தம் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் தீவிரமாக மழை பெய்து வந்தது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்தது.
நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், தேனி ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக மழை பெய்தது. அதிலும் நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.

இரண்டு
அதிலும் வங்ககடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு வங்க கடலில் பகுதியில் உருவானது. அதனையடுத்து ஒடிசா - மேற்கு வங்கம் அருகே இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. சென்னையிலும் ஒரு வாரம் தீவிரமாக மழை பெய்தது.

மீண்டும் வருகிறது
சரியாக இரண்டு மாதங்கள் இதன் காரணமாக தமிழகத்தில் தீவிரமாக மழை பெய்தது. இந்த நிலையில் ஆகஸ்ட்.19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எங்கு பெய்யும்
இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்ய போகிறது. மொத்தம் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தர்மபுரி, வேலூர், திருவள்ளூர், கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னை எப்படி
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்திற்கு பின் மழை பெய்யலாம். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். வங்க கடல் அருகே மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். அங்கு பலத்த காற்று வீசும் என்று வானிலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வரலாறு காணாத மழை
கடந்த இரண்டு மாதமாக தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. 220 மிமீ மழை வரை பெய்தது. சராசரி தென்மேற்கு பருவமழையை விட இது அதிகமான மழையாகும் . இந்த நிலையில் தற்போது ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை போன உடன் மீண்டும் இன்னொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும், மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications