Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே இந்த முறை அக்கட்சி வெல்லும் என்றும் மற்ற தொகுதிகளில் திமுக வெல்லும் என்றும் ஏஎன்எஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, சசிகலா- ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது.

ANS Survey

இந்த நிலையில் அக்னி நியூஸ் சர்வீல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் விவரங்களை பார்க்கலாம்.

கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 44.9 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் என தெரிவித்திருந்தனர். அது போல் அதிமுக 38.5 சதவீதம் வாக்குகளை பெறும்.

முதல்முறையாக களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 9.7 சதவீத வாக்குகளை பெறும். சீமானின் நாம் தமிழர் கட்சி 4.8 சதவீத வாக்குகளை பெறும். நோட்டாவுக்கு 2.1 சதவீதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

180+ இடங்களில் வெற்றி

இந்த நிலையில் திமுக கூட்டணி 180 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்றும் அதிமுக மட்டும் 54 தொகுதிகளில் வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக வெல்லும்.

கடந்த முறை கோவை மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. ஆனால் இந்த முறை எப்படியாவது கோவையை தட்டித் தூக்க செந்தில் பாலாஜி, தேர்தல் பொறுப்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் சட்டசபை தேர்தல்

அது போல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்த 20-ல் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. நெல்லையில் நயினார் நாகேந்திரன், கோயமுத்தூர் தெற்கில் வானதி, நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் சி.சரஸ்வதி ஆகியோர் வென்றனர்.

ஆனால் தற்போது நடந்த ஏஎன்எஸ் சர்வேயில் பாஜக கடந்த முறை வென்ற 4 தொகுதிகளில் ஒன்றில் மட்டும்தான் வெல்லுமாம். மீதமுள்ள 3 தொகுதிகளில் திமுகதான் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல்

அது போல் கடந்த மக்களவை தொகுதியில் கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்பாரா என இந்த சர்வே அப்போது கணித்திருந்ததையும் தற்போது தெரிவித்துள்ளனர்.

அதிமுக - பாஜக கூட்டணி

அதிமுக- பாஜக கூட்டணி வென்று ஆட்சியை பிடிக்கும் என பல்வேறு பகீரத பிரயத்தனங்களை எடுத்து வரும் நிலையில் வரும் தேர்தலிலும் பாஜக, அதிமுகவுக்கு தோல்வியே கிடைக்கும் என்று சர்வே முடிவுகள் சொல்கின்றன. என்னதான் திமுக 180 க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என சொன்னாலும் பாஜக 4 தொகுதிகளில் 1-ல் மட்டுமே வெல்லும் என கணித்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே இது கருத்துக் கணிப்புகளா, இல்லை திணிப்புகளா என்பதை அறிய மே 4ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+