அதிரடி காட்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். ஏரியிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளியதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வடக்கு மண்டல இளைஞர் அணி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு திடலை சீரமைப்பதற்காக அனுமதியின்றி ஏரியில் வண்டல் மண் அள்ளப்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

E V Velu

திருவண்ணாமலை மாவட்டம் மலைப்பாம்பாடி ஏரியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 10-23 அடி ஆழம் வரை வண்டல் மண் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 45 லட்சத்திற்கும் அதிகமான கன அடி மண் எடுக்கப்பட்டு அரசு கருவூலத்திற்கு ரூ.8.22 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

ஏரியிலிருந்து சட்டவிரோதமாக அள்ளப்பட்ட மண், எ.வ.வேலுவின் மகன் எ.வ.குமரனுக்கு சொந்தமான அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. இதற்கு வருவாய்த்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அல்லது மாநகராட்சியிடம் இருந்து எவ்வித முன் அனுமதியும் பெறப்படவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட கள ஆய்வுக்கு பிறகு, போதிய முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்ததால் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு அவரது மகன் எ.வ.குமரன் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னதாக, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்தபோது சாலைப் பணிகள் தொடங்குவதற்கு முன்னரே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவிக்கப்பட்டதாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை ஜூன் மாதம் ஒரு டெண்டர் முறைகேடு வழக்கை பதிவு செய்தது. அந்த வழக்கில் எ.வ.வேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+