அனுமன் ஜெயந்தி, தை பொங்கல், தை பூசம் - ஜனவரி மாதத்தில் என்னென்ன விஷேசம் இருக்கு
ஜனவரி மாதத்தில் முக்கிய விஷேச தினங்கள் உள்ளன. மார்கழி அமாவாசை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2021ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்து விட்டது ஜனவரி மாதத்தில் மார்கழி மாதம் பாதி நாட்களும் தை மாதம் 15 நாட்களும் இணைந்திருக்கும். இந்த மாதங்களில் நிறைய விஷேச நாட்கள் உள்ளன. மார்கழி அமாவாசை அனுமன் ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது. தை திருநாள், தை பூசம் போன்ற முக்கிய பண்டிகைகள் உள்ளன. எந்தெந்த நாட்களில் என்னென்ன பண்டிகைகள் இருக்கிறது என்று பார்க்கலாம். முக்கிய விரத நாட்களை உங்க டையரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

- ஜனவரி 1 வெள்ளிக்கிழமை - ஆங்கில புத்தாண்டு திருமங்கை மன்னன் வேடுபறி
- ஜனவரி 2 சனிக்கிழமை - சங்கடஹர சதுர்த்தி
- ஜனவரி 3 ஞாயிறு கிழமை - திருவாய்மொழி திருநாள் சாற்றுமுறை நம்வார் மோட்சம்
- ஜனவர் 4 திங்கட்கிழமை - சஷ்டி விரதம் இயற்பா சாற்றுமுறை
- ஜனவரி 6 புதன்கிழமை காலாஷ்டமி சங்கராஷ்டமி புதாஷ்டமி
- ஜனவரி 9 சனிக்கிழமை உற்பத்தி ஏகாதசி
- ஜனவரி 10 ஞாயிறுக்கிழமை அகண்ட துவாதசி மிருத்யுஞ்ச பிரதோஷம்
- ஜனவரி 11 திங்கட்கிழமை கூடாரவல்லி, மாத சிவராத்திரி
- ஜனவரி 12 செவ்வாய்கிழமை சர்வ அமாவாசை அனுமன் ஜெயந்தி கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி
- ஜனவரி 13 புதன்கிழமை போகிப்பண்டிகை
- ஜனவரி 14 வியாழன்கிழமை மகர சூரியன் உத்தராயண புண்ணியகாலம் பொங்கல் பண்டிகை
- ஜனவரி 15 வெள்ளிக்கிழமை மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்
- ஜனவரி 16 சனிக்கிழமை வியாதிபாத சிரார்த்தம் கரிநாள் காணும் பொங்கல் மாத சதுர்த்தி
- ஜனவரி 18 திங்கட்கிழமை சஷ்டி விரதம்
- ஜனவரி 21 வியாழக்கிழமை துர்க்காஷ்டமி
- ஜனவரி 23 சனிக்கிழமை கிருத்திகை விரதம்
- ஜனவரி 24 ஞாயிறு கிழமை புத்திரத ஏகாதசி பீஷ்ம ஏகாதசி
- ஜனவரி 25 திங்கட்கிழமை வாஸ்து நாள் பீஷ்ம துவாதசி, கூர்ம துவாதசி பீம துவாதசி முகூர்த்த நாள்
- ஜனவரி 26 செவ்வாய்கிழமை ருண விமோசன பிரதோஷம்
- ஜனவரி 28 வியாழக்கிழமை தைப்பூசம் முருகன் ஆலயங்களில் தை பூச திருவிழா நடைபெறும்
- ஜனவரி 30 சனிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி












Click it and Unblock the Notifications