வேற லெவலுக்கு கொண்டு போய்ட்டீங்க.. முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

6-வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை, கடந்த ஜனவரி 19ஆம் தேதி சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்று வரை நடைபெற்ற இப்போட்டிகளில், 5,600 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்று வந்த 6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவடைந்தன.

Anurag thakur praises tn chief minister mk stalin at closing ceremony of Khelo India games

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் 97 பதக்கங்களை வென்று முதன்முறையாக 2வது இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது. கேலோ இந்தியா வரலாற்றில் முதல் முறையாக டாப் 3க்குள் வந்துள்ளது தமிழ்நாடு.

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி நிறைவு விழா நடைபெற்றது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

கேலோ இந்தியா போட்டிகளை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில், "கடந்த 10 நாட்களாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை உற்று நோக்கியது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு இந்த போட்டிகளை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

தமிழ்நாட்டின் விருந்தோம்பல் தான் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தி முடிக்க மிகப்பெரிய ஆதரவாக இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்து ஆயிரக்கணக்கான வெற்றி வீரர்களை உருவாக்கியுள்ளார்.

இளம் வீரர், வீராங்கனைகள் நிகழ்த்திய சாதனைகள் பிரமிப்படையச் செய்கின்றன. ஒலிம்பிக்கில் இந்தியா சாதனை படைக்க கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் உறுதுணையாக இருக்கும். கேலோ இந்தியா போட்டிகள், வீரர், வீராங்கனைகளுக்கு வாய்ப்பையும், ஊக்கத்தையும் அளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது." எனத் தெரிவித்தார்.

முன்னதாகப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு இருப்பதற்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளதை கேலோ இந்தியா விளையாட்டுகள் மூலம் நிரூபித்துள்ளோம். எத்தனையோ முறை தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு பங்கேற்று இருந்தாலும், இந்த முறைதான் பதக்க பட்டியலில் முதல் மூன்று இடங்களில் தமிழ்நாடு வந்துள்ளது. திராவிட மாடல் அரசு எடுத்த முயற்சிகளே இதற்கு காரணம் எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+