திமுகவில் இணைந்த 2 வாரங்கள்.. அன்வர் ராஜாவுக்கு முக்கிய பொறுப்பைக் கொடுத்த ஸ்டாலின்!
சென்னை: அதிமுகவில் இருந்து கடந்த மாதம் திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவுக்கு இலக்கிய அணித் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவில் இணைந்த 2 வாரங்களில் அன்வர் ராஜாவுக்கு பதவி அளித்திருப்பது பல்வேறு விவாதங்களைத் தொடங்கி இருக்கிறது. இதன் மூலமாக மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் இணையும் நிர்வாகிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்காக திமுக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இதனிடையே 2 வாரங்களுக்கு முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திடீரென அண்ணா அறிவாலயம் வந்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனென்றால் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் அன்வர் ராஜா, அதிமுகவின் முன்னோடிகளில் ஒருவர். அதேபோல் அதிமுகவின் இஸ்லாமிய முகமாக இருந்து வந்த அன்வர் ராஜா, அண்ணா அறிவாலயம் வரும் வரை எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியவில்லை. இதன்பின் அவசர அவசரமாக அன்வர் ராஜா நீக்கப்படுவதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
பாஜக உடன் கூட்டணி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்வர் ராஜா விலகியதாக அறிவித்தார். இதன் மூலமாக திமுகவுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவு முழுமையாக இருப்பதாக அக்கட்சியினர் கூற தொடங்கினர். அதேபோல் பாஜகவின் அரசியலுக்கு அதிமுக பலியாகி வருவதாகவும் திமுகவினர் விமர்சிக்க தொடங்கினர்.
அன்வர் ராஜாவை தொடர்ந்து புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமானும் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன் மூலமாக விஜயபாஸ்கருக்கு திமுக செக் வைத்தது. இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்த அன்வர்ராஜாவுக்கு, அக்கட்சியின் இலக்கிய அணித் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மாற்றுக் கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தரப்பில் தூதுவிடப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்தால், பதவி அளிக்கப்படும் என்று மறைமுக செய்தியைக் கூறி இருக்கிறது. அதேபோல் இஸ்லாமியர்களுக்கும் திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் பார்க்கப்படுகிறது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications