அன்வர் ராஜா தலை தலையா அடிச்சிக்கிட்டாரே?? திசைமாறும் சிறுபான்மையினர் ஓட்டு.. விஜய்யை முந்தும் திமுக
சென்னை: வரவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி அரசியல் களத்தில் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. திமுக, அதிமுகவுக்கு நடுவே தவெகவும் களமிறங்கி உள்ள சூழலில் சிறுபான்மையினர் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளிலும் மும்முரமாகி உள்ளன.. தற்போதைய சூழலில் களம் யாருக்கு சாதகமாக உள்ளது?
தமிழகத்தில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் சேர்த்து சுமார் 15 சதவீதம் சிறுபான்மையினர் வாக்குகள் உள்ளன. இதில் கிறிஸ்தவர்கள் மட்டும் சுமார் 6 சதவீதம். இந்த வாக்குகள் எந்தப் பக்கம் சாயும் என்பது தேர்தல் முடிவில் முக்கிய பங்கு வகிக்க கூடியது.

சிறுபான்மையினர் வாக்குகள்
எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தவரை, சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுகவுக்கு பக்க பலமாக வைத்திருந்தார்.. பின்னர் ஜெயலலிதாவும் அந்த வாக்கு வங்கியை பெரும்பாலும் தன்னிடத்திலேயே தக்க வைத்திருந்தார்.
|
ஆனால், அவர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்,பாஜகவுடன் அதிமுக கூட்டணி, சிஏஏ போன்ற சட்டங்களுக்கு ஆதரவு அளித்தது ஆகிய காரணங்களால், சிறுபான்மையினர் மத்தியில் அதிமுக மீது இருந்த நம்பிக்கை தற்போது குறைந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அன்வர் ராஜா - அதிமுக
இதைத்தான் மூத்த தலைவர் அன்வர் ராஜா அன்றே சிஏஏ விவகாரத்தில் எச்சரித்திருந்தார்.. "மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுவதால், தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து கொண்டிருக்கிறது" என்று கொந்தளித்தார்.. ஆனாலும் நாடாளுமன்றத்திலேயே அதிமுக அப்போது ஆதரவு தந்ததை இங்கு நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது,
இதன் விளைவாக, அந்த வாக்குகள் பெரும்பாலும் திமுக பக்கம் நகர்ந்தன... அதே நேரத்தில், திமுக சிறுபான்மையினர் விவகாரங்களில் தெளிவான நிலைப்பாடு எடுத்தது.
ஓட்டுகளை வளைக்கும் திமுக
குறிப்பாக சிஏஏ, முத்தலாக், வக்பு வாரிய திருத்த சட்டம் போன்றவற்றை எதிர்த்தது, சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள், அரசு உதவிகள் ஆகியவற்றையும் தொடர்ந்து வழங்கி வருவது போன்ற காரணங்களால் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு வலுவாக உள்ளன.. இதுபோக இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவும் திமுகவுக்கு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்றது.
ஆனால், இந்த நிலை வரும் தேர்தலிலும் அப்படியே தொடருமா என்ற சந்தேகம்தான்.. காரணம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கி உள்ளது.. திமுகவுக்கு செல்லும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை ஓரளவு சிதறடித்து, நாம் தமிழர் கட்சியும் பெற்று வந்த நிலையில், இந்த முறை தவெக அதிரடி காட்ட போவதாக தெரிகிறது.
விஜய் கிறிஸ்தவ வாக்குகள்
விஜய் கிறிஸ்துவர் என்பதால், கிறிஸ்தவ சமூக வாக்குகள் அவரை நோக்கி செல்லுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதுமட்டுமல்ல, விஜய் சிஏஏவை எதிர்த்தார். வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றார்.
இருந்தாலும், அவர் பாஜகவின் B-டீம் என்ற விமர்சனங்களுக்கும் ஆளாகி வருவதை மறுக்க முடியாது.. போதாக்குறைக்கு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவர் இதுவரை தெளிவான கருத்து சொல்லாததும் சந்தேகங்களை அதிகரிக்க செய்துள்ளது.
சிதறும் சிறுபான்மை வாக்குகள்
இதனால், வரும் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் முழுவதும் ஒரே கட்சிக்கு செல்லாமல், திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகியவற்றுக்கு இடையே சிதற வாய்ப்பு உள்ளது என்றே கணிக்கப்படுகிறது. எனவேதான், சிறுபான்மையினர் ஆதரவை தக்க வைக்க திமுகவும் தீவிரமாக செயல்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாக்கள், ஹஜ் பயணிகளுக்காக நங்கநல்லூரில் ஹஜ் இல்லம், நாகூர் அனிபா நூற்றாண்டு விழா போன்ற நிகழ்வுகள் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
மொத்தத்தில், சிறுபான்மையினர் வாக்குகள் இந்த தேர்தலில் "தீர்மானிக்கும் வாக்குகளாக" மாறும். அந்த வாக்குகளை யார் நம்பிக்கையுடன் கையாள்கிறார்கள் என்பதே இறுதி முடிவை தீர்மானிக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்,
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications