அன்வர் ராஜாவின் திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்? - போட்டுடைத்த மூத்த பத்திரிகையாளர்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய அமைப்புச் செயலாளரான அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்வர ராஜா அறிவாலயத்துக்குச் சென்ற பிறகே அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அன்வர் ராஜாவின் இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், அன்வர் ராஜாவின் இதே கருத்து பலருக்கும் இருக்கலாம், அவரது உதாராணத்தைப் பின்பற்றி பலரும் திமுகவுக்குச் செல்லும் முடிவை எடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக
2026 சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், இதனை மூத்த தலைவர்கள் பலரும் விரும்பவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இந்நிலையில், பாஜக கூட்டணி குறித்து அன்வர் ராஜா தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்தார். தற்போது அதிமுக- பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது என அன்வர் ராஜா குறிப்பிட்டிருந்தார்.

சலசலப்பு
அன்வர் ராஜவின் இந்தக் கருத்து அதிமுக பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது அன்வர் ராஜாவின் தனிப்பட்ட கருத்து என்று அதிமுக தலைமை விளக்கம் கொடுத்திருந்தது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து விலகி அன்வர் ராஜா திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியது. அன்வர் ராஜா இன்று காலை அறிவாலயம் சென்ற நிலையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
அறிவாலயம் சென்ற அன்வர் ராஜா
அண்ணா அறிவாலயம் சென்ற அன்வர் ராஜாவை, மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். அங்கு அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில், அன்வர் ராஜாவின் இந்த முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், அன்வர் ராஜாவின் இதே கருத்து பலருக்கும் இருக்கலாம், அவரது உதாராணத்தைப் பின்பற்றி பலரும் திமுகவுக்குச் செல்லும் முடிவை எடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
தராசு ஷியாம் கருத்து
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறியுள்ளதாவது: அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுவில் இணைந்துள்ளது எதிர்பார்த்த ஒன்றுதான். அதிமுக, பாஜக கூட்டணியில் அன்வர் ராஜா போன்ற மூத்த தலைவர்களுக்கு இடமில்லை. அதற்குப் பொருத்தமாகவும் அவர்கள் அமையா மாட்டார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அவர் எம்ஜிஆர் காலத்து சீனியர்.
உலகம் சுற்றும் வாலிபன்
ஒரு காலகட்டத்தில் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீசானால் அன்றைய மதுரை திமுக மேயர் முத்து, தான் சேலைக் கட்டிக் கொள்வதாக சபதம் போட்டார். அந்தப் படம் ரிலீஸான நிலையில் முத்துவுக்கு பலரும் சேலையை பார்சல் அனுப்பினார்கள். அப்போது, அன்வர் ராஜா சேலையோடு சேர்த்து வளையல், பெண்கள் பயன்படுத்துகிற பொருள்களை எல்லாம் அனுப்பியது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்து கைது வரையும் போனது.
மாற்றுக் கட்சி
அன்றிலிருந்து இன்று வரை அன்வர் ராஜா அண்ணா திமுககாரர்தான். ஆனால், பாஜக கூட்டணி என்று வரும்போது அன்வர் ராஜாவின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். அங்கே அவருக்கு இந்த கூட்டணி அங்கு வசப்படாது. அதனால் அவர் மாற்றுக் கட்சிக்கு செல்லும் நிலைமை வந்துவிட்டது. மாற்றுக் கட்சி என்று வரும்போது அன்வர் ராஜாவுக்கு திமுகவை தவிர வேறு வாய்ப்பில்லை. ஏனெனில் திராவிட ஓட்டு வங்கி முக்கியம்.
அதிமுக மூத்த தலைவர்கள்
1972 இல் அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. அதுவரை எம்ஜிஆர் திமுகவில் பொருளாளர் தான். அதனால், திராவிட ஓட்டு வங்கியை ஒருங்கிணைக்க வேண்டிய ஒரு காலகட்டம் வந்துள்ளதாக அன்வர் ராஜா உணர்ந்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் பலரும் அதிமுகவில் இருந்து திமுகவில் சென்றவர்கள்தான். இன்று திமுகவில் இருக்கும் பல மூத்த அமைச்சர்கள் அதிமுகவின் மூத்த தலைவர்கள்தான்.
அன்வர் ராஜாவின் முடிவு
ராமச்சந்திரன் முதல் முத்துசாமி வரை எல்லோரும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் தான். அதனால், அன்வர் ராஜா திமுகவில் அந்நியப்படமாட்டார். பிற கட்சிகளுக்குச் சென்றால் அந்நியப்படுவார். அன்வர் ராஜா சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அன்வர் ராஜாவின் இதே கருத்து பலரும் உள்ளத்தில் வைத்திருக்கலாம். அமைப்புச் செயலாளர்களில் ஒருவர் திமுகவுக்கு செல்வது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அன்வர் ராஜாவின் உதாராணத்தைப் பின்பற்றி பலரும் திமுகவுக்குச் செல்லும் முடிவை எடுக்கலாம் என்றார்.
-
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா












Click it and Unblock the Notifications