Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலானு சொன்னதுமே! "வெளியே போ"னு கத்திய சி.வி.சண்முகம்! அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை விமர்சித்ததாலும், சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாலும் கடந்த 2021 ஆம் ஆண்டு அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். எனினும், 2023 ஆம் ஆண்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்து அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்தக் காட்சிகள் ஏன் நடந்தன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்துத் தனது எதிர்ப்பைத் தெரிவித்த அன்வர் ராஜா, தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) இணைந்துவிட்டார். அவர் அண்ணா அறிவாலயம் சென்றது தெரிந்தவுடன், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்வர் ராஜாவை அ.தி.மு.க.விலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இதுபோல, நான்கு ஆண்டுகளுக்கு முன்பும் அன்வர் ராஜா அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். அப்போது அவர் எப்படி மீண்டும் கட்சியில் இணைந்தார் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

anwar raja admk

கடந்த 2021 ஆம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமியை அன்வர் ராஜா விமர்சிக்கும் வகையில் ஒரு ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியைத் தக்கவைத்திருந்தால், எடப்பாடி தன்னை "புரட்சித் தலைவர்" என்றே சொல்லியிருப்பார் என்று அன்வர் ராஜா விமர்சித்திருந்தார். இதில் அவர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசியதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது.

வலுவில்லாத அதிமுக

இந்தச் சூழலில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா, "தற்போது அ.தி.மு.க. வலுவில்லாமல் உள்ளது. அதனை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம்" என்றார்.

தாக்க முயன்றாரா சி.வி.சண்முகம்

இதற்கு மற்ற நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அன்வர் ராஜாவைத் தாக்க முயன்றதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து அன்வர் ராஜா விளக்கமளிக்கையில், "என்னை பேசவிடாமல் சி.வி. சண்முகம் தடுத்து என்னை வெளியே போகச் சொன்னது உண்மைதான். ஆனால், அவர் என்னை தாக்க முற்பட்டார் எனச் செய்திகளில் வந்ததெல்லாம் பொய். அவர் கோபத்துடன் பேசியதைப் பார்க்கும்போது, அவர் என்னை தாக்க வருவது போல் தெரிந்துவிட்டது" என்று தெரிவித்திருந்தார்.

சசிகலா ஆதரவு

அதே 2021 ஆம் ஆண்டு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அன்வர் ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர், "எடப்பாடி பழனிசாமியை சின்னம்மா (சசிகலா)தான் முதல்வராக்கினார்" என்று சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார்.

இதனால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரும் கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டனர். அதில், "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகவும், கட்சியின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கத்திற்காகவும், அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்" என்று டிசம்பர் 1 ஆம் தேதி அறிவித்தனர்.

மன்னிப்பு கேட்ட அன்வர்

ஒன்றரை ஆண்டாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து மீண்டும் கழகத்தில் சேருவதாக இருந்தால், அத்தகையவர்கள் கழகப் பொதுச்செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்து, மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்களும், பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்களும் மட்டுமே கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

மீண்டும் இணைந்த அன்வர்

இந்தச் சூழலில், அன்வர் ராஜா மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். அன்வர் ராஜா இணைந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிட்டால், அங்கு அவர் வெற்றிபெற அன்வர் ராஜாவின் பங்கு அவசியம் என்று கூறப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+