Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரவிந்த்சாமி- காயத்ரி முதல் ராமராஜன்- நளினி வரை! குழந்தை பிறந்ததும் டைவர்ஸ் செய்த கோலிவுட் ஸ்டார்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் - சைந்தவி பிரிய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இதுவரை குழந்தை பிறந்ததும் விவாகரத்து ஆன தம்பதிகளின் விவரம் தெரியுமா?

ஜி.வி.பிரகாஷும் பின்னணி பாடகி சைந்தவியும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. 11 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் திடீரென இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Apart from GV Prakash and Saindhavi Here are the list of couples who got separated after child birth

இந்த நிலையில் இருவரும் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களுடைய பிரிவுக்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் இவர்களுடைய பிரிவால் வேதனை அடைந்துள்ளனர்.

இதுவரை குழந்தை பிறந்த பிறகு டைவர்ஸ் செய்த தம்பதிகளின் பட்டியலை பார்க்கலாம்.

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

டி இமான்- மோனிகா ரிச்சர்டு: இசையமைப்பாளர் டி இமான்- மோனிகா ரிச்சர்டு என்பவரை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். விவாகரத்து பிறகு இமான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இயக்குநர் பாலா- முத்துமலர்: சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்களை எடுத்தவர் இயக்குநர் பாலா. இவருக்கும் முத்துமலருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரார்த்தனா என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அரவிந்த்சாமி- காயத்ரி: ரோஜா, தளபதி, மின்சார கனவுகள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அரவிந்த்சாமி. இவருக்கும் காயத்ரி என்பவருக்கு 1994 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆதிரசுவாமி, ருத்ரசுவாமி ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் 2010இல் விவாகரத்து பெற்றனர்.

பார்த்திபன்- சீதா: நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் புதிய பாதை படத்தில் சீதா நடித்த போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கீர்த்தனா, அபிநயா என்ற இரு குழந்தைகள் உள்ளனர், ராக்கி என்ற மகனும் உள்ளார். இவர்கள் கருத்து வேறுபாட்டால் 2001 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

ராமராஜன்- நளினி: 1980 களில் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு இணையாக வளர்ந்தவர் ராமராஜன். இவரும் நளினியும் 1987 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அருணா, அருண் ஆகிய மகள், மகன் உள்ளனர். நளினிக்கும் ராமராஜனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் 2000ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+