கலைஞர் உரிமை தொகையை விடுங்க.. மகளிருக்கு கொட்ட போகுது பணம்.. அப்படியே அசரடித்த உதயநிதி அறிவிப்பு
சென்னை; மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்து மகளிருக்கு வருமானம் வழங்கும் வகையில் மதி சந்தை விற்பனை இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார். ஆய்வு செய்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டு இருக்கிறார்.

குறிப்பாக சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி வங்கிக் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவது குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்தார். அதன்படி சுயஉதவி குழுக்கள் எளிமையாக இயங்கும் வகையில், அதாவது எளிதாக பணம் பெற, தொழில் தொடங்க, பணிகளை செய்ய வசதியாக ஒரு உதவி அமைப்பை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக மதி சிறகுகள் - மகளிர் புத்தொழில் இயக்கம் என்ற பெயரில் புதிய இயக்கம் என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது. தெலங்கானா அரசின் WeHub என்ற நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு இணைந்து இதற்கான பக்கத்தை இயக்கம். மகளிர் சுயஉதவிக்குழு பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ளது. இதனால் விரைவில் பெண்கள் தங்கள் மகளிர் சுய உதவி குழு பொருட்களை சந்தைப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளம்: அந்த வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்து மகளிருக்கு வருமானம் வழங்கும் வகையில் மதி சந்தை விற்பனை இணைய தளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திட்டங்களின் பயனாக இன்று சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.
சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில / மாவட்ட / வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகள் வாயிலாக சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களுக்கு விற்பனை வாய்ப்புகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பங்களிப்பு பெருகி வரும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புப் பொருட்களை இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக விற்பனை செய்ய தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இணைய தளம் வாயிலாக பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களை வாங்கிடும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் மதி சந்தை விற்பனை இணைய தளம் மற்றும் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் முற்றம் இதழிற்கான சந்தாவினை செலுத்தி, முற்றம் மாத இதழினை தங்களின் இல்லத்திற்கே நேரடியாக அஞ்சல் வாயிலாக பெற்றிடும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு முற்றம் மாத இதழ் இணைய தளம் /கைப்பேசி செயலி ஆகியவற்றையும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை. உதயநிதி ஸ்டாலின் இன்று (18.11.2023) இந்நிகழ்வினைத் தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை அனைத்துத் தரப்பினரும் வாங்கிடும் வகையில் தமிழ்நாடு மகளிர் ம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த மதி அனுபவ அங்காடியில் சுய உதவிக் குழு மகளிரால் நடத்தப்படும் "மதி கஃபே"
என்ற சிற்றுண்டி உணவகமும் உள்ளே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications