Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம் குறைப்பு.. நாளை முதல் அமலுக்கு வருகிறது.. வெளியானது அரசாணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், நாளை முதல் கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு, பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி பணிகள்: தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

Apartments EB Cost cut notified TN Government Gazette and will be effective from tomorrow

அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.. இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு குறித்தும், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

முதல்வர் ஆலோசனை: பிறகு, வளர்ச்சிப் பணிகள் குறித்து 4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அந்தக்கூட்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அப்போது, முதல்வர் பேசும்போது, சென்னை மற்றும் பிற மாநகராட்சி புறநகர் பகுதிகளில் 10 மற்றும் அதற்கு குறைவான வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ 8 லிருந்து ரூ 5.50 காசாக குறைக்கப்படுவதாகவும் 3 மாடிக்கு மிகாத, மின் தூக்கி இல்லாத சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இந்த மின் கட்டண சலுகை பொருந்தும் என்றும் அறிவித்திருந்தார்.

மிகுந்த மகிழ்ச்சி: இந்த அறிப்பானது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சியையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக 1 யூனிட்டுக்கு ரூ. 8 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

நாளை அமல்: இந்த 1 யூனிட், 8 ரூபாயிலிருந்துதான், 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை அதாவது (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி ID-யை மின் கட்டண ஆணை எண் 7-ஐ நாள் கடந்த 2022 செப்டம்பர் மாதம் உருவாக்கியது.

தமிழக அரசு: தமிழக முதல்வர் கடந்த 18ம் அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் "பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் 15 பைசாவிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

நிர்ணயம்: இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IE-ஐ அறிமுகப்படுத்தியும் இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ரூ.5.50/யூனிட் என நிர்ணயித்தும் உள்ளன. இந்தக் கட்டணங்கள் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+