தவெக அரசின் அரசிதழ் அறிவிப்பில் அப்பாவு பெயர் ஏன்? ஏற்பட்ட குழப்பம்.. என்ன மேட்டர்?
சென்னை: திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அரசிதழில் சட்டப்பேரவை சபாநாயகரின் பெயர் அப்பாவு என குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜேசிடி பிரபாகர், சபாநாயகர் ஆகியுள்ள நிலையில் இன்னும் அப்பாவு பெயரில் அரசிதழில் அறிவிப்பு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் முதலமைச்சர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டிலும் வெற்றி வாகை சூடினார். அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, திருச்சி கிழக்கு தொகுதியை தற்போது முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி சட்டமன்ற தொகுதி காலியானதாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த தொகுதியில் அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். ஆகவே, இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அரசிதழில் சபாநாயகர் பெயர் அப்பாவு என இடம்பெற்று இருக்கிறது. இவர், கடந்த திமுக ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தற்போது ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக உள்ளார். முன்னதாக தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா செயல்பட்டார்.
புதிய அரசில் சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பொறுப்பேற்ற நிலையில், மே 10 ஆம் தேதியிட்ட அரசிதழில் மு. அப்பாவு பெயர் ஏன் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சட்டப்படி, சட்டப்பேரவை கலைக்கப்பட்டாலும் புதிய பேரவையின் முதல் அமர்வு நடைபெறும் வரை பழைய சபாநாயகரே பதவியில் தொடர்வார். ஜோசப் விஜய்யின் ராஜினாமாவை சபாநாயகராக அப்பாவு ஏற்றுக்கொண்டார். எனவே, புதிய அரசு அமைவதற்கான முதல் கூட்டத்தொடருக்கு முன் வந்த அறிவிப்பு என்பதால் அப்பாவு பெயர் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
-
எங்கே போனார்கள் சிங்கப்பெண்கள்? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தில் பேரதிர்ச்சி -
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
தமிழக பள்ளிகளில் விபூதி - குங்குமம் வைத்து செல்ல தடையா? கல்வி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications