#ஆந்திரரெட்டிகேங்..பாஜகவிடம் பல ஆயிரம் கோடி பெற்ற விஜய்? புட்டு புட்டு வைத்த மாஜி சபாநாயகர் அப்பாவு
சென்னை: தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதன்முறையாக ந்திராவுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்குள்ள கனகதுர்கா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். இந்த நிலையில் கட்சி ஆரம்பிப்பதற்கு முன் ஆந்திரா முதல்வரை சந்தித்து. பாஜகவிடம் பல்லாயிரம் கோடி ரூபாயை விஜய் வாங்கிக் கொண்டதாக பேசிக் கொள்வதாகவும், ஆந்திர ரெட்டி கேங் விஜயை ஆந்திராவுக்கு அழைத்துச் செல்கிறதா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி கட்சிகள் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்று கொண்டுள்ள முதல்வர் விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகா பயணம் மேற்கொண்டார்.
தற்போது முதன்முறையாக இன்று ஆந்திர பயணம் மேற்கொண்டிருக்கும் அவர், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். முன்னதாக விஜயவாடாவில் புகழ்பெற்ற கனக துர்கா கோவில் சுவாமி தரிசனம் செய்தார்.

விஜய் ஆந்திர பயணம்
பின்னர் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசிய அவர் கோதாவரி காவிரி ஆறு இணைப்பு திட்டம், கிருஷ்ணா நதிநீர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் விஜயின் ஆந்திர பயணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறார் தமிழ்நாடு முன்னாள் சபாநாயகர் அப்பாவு.
தமிழக நடிகை
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"தவெக தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் ஒன்றிய பெண் அமைச்சர் ஒருவர், ஆந்திர முதல்வர், தமிழக நடிகை உட்பட பல பேர் துபாயில் ஒன்று கூடி திமுகழகத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கு பாஜகவிடம் பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் வாங்கிக் கொண்டு தான் தவெக கட்சி ஆரம்பித்ததாக துபாய் வாழ் தமிழர்கள் சொல்வதை புறந்தள்ள முடியுமா சிஎம் சார்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய்யால் கரூரில் 41 பேர் பலியான அடுத்த நாளே பாஜக MP ஹேமா மாலினி தலைமையில் அவசரமாக வந்திறங்கிய பாஜக எம்பி குழு விஜய்க்கு ஆதரவாக கருத்து கூறியதையும் அந்த வழக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டதையும் தற்போது விசாரணை எதுவும் இன்றி முடக்கப்பட்டு இருப்பதுமே துபாய் சம்பவத்திற்கு சாட்சி என்பதை மறுக்க முடியுமா சிஎம் சார்.
தமிழக விவசாயிகள்
ஆட்சி அமைத்த 10 நாட்களுக்குள் ஆந்திராவை தலைமை இடமாகக் கொண்ட Hatsun பால் நிறுவனத் தலைவர் கோட்டையில் விஜய்யை சந்தித்த மர்மம் என்ன ? அடுத்த நாள் முதல் அரசு பால் கொள்முதலை குறைத்தது ஏன்? ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏன்? இவையெல்லாம் ஆந்திர முதல்வரின் பால் நிறுவனத்திற்கு விஜய் செய்யும் நன்றி கடன் என்றால் அது தமிழக விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் துரோகம் இல்லையா சிஎம் சார்.?
ஆந்திர ரெட்டி கேங்
தமிழக மின் உற்பத்தியை பாதியாக குறைத்து செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கி
5 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை யூனிட் 1க்கு 35 ரூபாய் வீதம் ஆந்திர நிறுவனத்திடம் 4500 MW மின்சாரத்தை மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்ததற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் வாங்குவதற்கு "ஆந்திர ரெட்டி கேங் " உங்களை ஆந்திரா அழைத்துச் செல்கிறதா சிஎம் சார்" என பதிவிட்டுள்ளார்.




Click it and Unblock the Notifications
