ரூ. 1000 உரிமை தொகை.. குஷியில் இருக்கும் பெண்களுக்கு இன்னொரு குட் நியூஸ் சொன்ன அரசு.. இதை படிங்க
சென்னை: தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையான மகளிருக்கான ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான முகாம்கள் நடந்து வரும் நிலையில் ஒருவேளை உங்களுக்கு இன்னும் விண்ணப்பங்கள் வரவில்லை என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது.. அது என்ன? இதை படிங்க!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதல் மூன்று நாட்களில் 36 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது .
முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வரை விண்ணப்பப் பதிவு நியாய விலைக் கடை பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக விண்ணப்பங்களையும், டோக்கன்களையும் விநியோகம் செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம்களில் முதல் மூன்று நாட்களில், 26.07.2023, மாலை 6.00 மணி வரை 36,06,974 விண்ணப்பங்கள் இணையதளம் வழி பெறப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு 34,350 தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் இருக்கும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விண்ணப்பம் பதிவு செய்ய தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் பயனாளிகளின் விண்ணப்பங்களைச் சரிபார்க்கவும் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் உதவி மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
ஒவ்வொரு உதவி மையத்திலும் ஒரு தன்னார்வலர் விண்ணப்பதாரர்களின்
விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு உதவி செய்வார். மீதம் உள்ள 14,825 நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் விநியோகம் முகாம் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்னதாகத் தொடங்கும்.
அனைத்து முகாம்களிலும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான இருக்கைகள், குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.இத்திட்டச்செயலாக்கம் குறித்து இன்று (26.07.2023) தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கலந்துக்கொண்டனர், என்று குறிப்பிட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுக்க இதற்கான முகாம்களை முதல்வர் ஸ்டாலின் 4 நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகாம்களில் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
மீண்டும் விண்ணப்பம்: இதற்கான முகாம்கள் நடந்து வரும் நிலையில் ஒருவேளை உங்களுக்கு இன்னும் விண்ணப்பங்கள் வரவில்லை என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதன்படி விடுபட்ட மக்களுக்கு விண்ணப்பங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 1 முதல் 4 ஆம் தேதி வரை மீண்டும் கலைஞர் உரிமைத்தகைக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். முதல் கட்டமாக வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கப்பட்ட போது விடுபட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக மீண்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இரண்டாம் கட்ட முகாம்களில் அதை டோக்கன் அடிப்படையில் கொடுக்கலாம்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications