Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்தது செல்லும்.. சென்னை ஹைகோர்ட் போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளராக நியமித்ததை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியக்குமார் பொது நலன் மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மனுதாரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் முக்கிய திட்டங்கள், தகல்வகள், தேவையான செய்திகளை ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்வதற்காக, எடுத்துரைப்பதற்காகவும் பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்கவும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், ஜெ ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், அமுதா ஐஏஎஸ், தீரஜ் குமார் ஐஏஎஸ், ககன் தீப்சிங் பேடி ஐஏஎஸ் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

appointment-of-4-ias-officers-as-spokespersons-of-will-go-ahead-madras-high-court-orders

4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

கடந்த மாதம் 14 ஆம் தேதி தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த நிலையில், தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியக்குமார் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

முறையாக அரசாணை பிறப்பித்து ஆணை வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பது சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல. இதில் எந்த சட்ட பலனும் இல்லை. மேலும் செய்தி தொடர்பாளராக இவர்களை பயன்படுத்தி ஆளுங்கட்சிக்கு சாதகமாக செய்திகள் வெளியிட நேரிடும் அபாயம் உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நியமிக்கப்படவில்லை

எனவே இது அரசியல் சாசன கொள்கைகளுக்கு எதிராக உள்ளதால், 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளாராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி, எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், 'அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு தமிழகத்தில் 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு செய்தித் தொடர்பாளர்களாக முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதம் என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில், "ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை. அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் எந்த சட்டமும், விதிகளும் இல்லை" என கூறப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், 4 ஐஏஎஸ் அதிகாரிகளை அரசின் செய்தி தொடர்பாளராக நியமித்தது செல்லும் என்று உத்தரவிட்டனர். மேலும், வழக்கறிஞர் சத்தியக்குமாருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+