காங்கிரஸிலிருந்து அதிமுகவிற்கு தாவிய அப்சரா ரெட்டிக்கு செய்தித்தொடர்பாளர் பதவி
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டி கட்சியின் செய்தி தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: அதிமுகவின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார் அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர். இனி தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக சார்பில் பங்கேற்று பேசுவார் அப்சரா ரெட்டி.
லண்டனில் படித்திருப்பதாக கூறப்படும் அப்சரா கடந்த 2016ல் பாஜகவில் இணைந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் டாக் ஷோ நடத்தி வந்த அப்சரா ரெட்டி. ஜெயலலிதா முன்னணியில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது அவர், தினகரன் அணியில் இருந்தார். சசிகலா குடும்பத்துடன், இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணபிரியாவின் நெருக்கமான தோழி என்று கருதப்பட்டார். அங்கு ஏற்பட்ட மனக்கசப்பில் அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மகிளா காங்கிரஸ் கட்சியின் தேசியச்செயலாளராக இருந்த அப்சரா ரெட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது கடும் அதிருப்தியில் இருந்தார். இதனையடுத்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த நிலையில் அவருக்கு செய்தித்தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூக தொடர்பு ஊடகங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் அப்சரா ரெட்டி இன்று முதல் இணைக்கப்கொள்ளப்படுகிறார்.
தொலைக்காட்சிகள் மற்றும் சமூக தொடர்பு ஊடகங்களில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து பேசுவதற்காக அப்சரா ரெட்டி அவர்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் இனி
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications