ஆக்சிடெண்ட் ஆனா கூட காசு வேணும்! ஏஆர் ரஹ்மான் மகன் காவேரியில்.. அடிபட்டவர் அரசு மருத்துவமனையில்!
சென்னை: பிரபல இசை அமைப்பாளர் ஏஆர் ரகுமானின் மகனும் பாடகருமான ஏஆர்ஆர் அமீன் இன்று காலை சென்னை கத்திப்பாரா பகுதியில் நடந்த விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமீனும் அவரது நண்பரும், காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர் திசையில் வந்து விபத்தில் சிக்கிய ரேபிடோ காரின் ஓட்டுனர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பணம் இருந்தால் தான் சிகிச்சை கூட காஸ்ட்லியாக கிடைக்கும் என விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழ் இசை உலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல இசையமைப்பாளராக வளம் வருபவர் ஏ ஆர் ரகுமான். ரோஜா படத்தில் தொடங்கிய அவர் இசைப் பயணம் தற்போது உலகம் முழுவதும் விரிவடைந்து இருக்கிறது. ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தவர் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார்.

உச்சபட்சமாக ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இரண்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்தவர் ரகுமான். தந்தை ஏஆர் ரஹ்மானைப் போலவே சிறுவயதில் இருந்தே இசை மீது ஆர்வம் கொண்டவர் அவரது மகன் ஏஆர்ஆர் அமீன்.
ஏஆர் ரஹ்மான்
ஏற்கனவே ஏஆர் ரஹ்மானின் இசையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ள அவர், 'ஓ காதல் கண்மணி' படத்தில் இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வரும் ஏஆர்ஆர் அமீன் திரைப்படப் பாடலுடன் தனி இசை பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் இடம் பிடித்திருக்கிறார் அமீன். அதுவும் ஒரு விபத்து காரணமாக இன்று காலை கோயம்பேடு அருகே அமீனும் அவரது நண்பரும் விலையுயர்ந்த போர்ச்சே காரில் பயணித்தனர்.
அமீன்
அப்போது எதிரே வந்த ராபிடோ கார் மீது அமீனீன் கார் மோதி விபத்துக்குள்ளானது. மோதலில் இரு கார்களும் சேதம் அடைந்த நிலையில் அதில் பயணித்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அமீன் மற்றும் அவரது நண்பரும் மற்றொரு காரில் வந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருக்கின்றனர்.
மருத்துவமனையில் அனுமதி
அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் அமீனும் அவரது நண்பரும் சென்னையின் பிரபலமான காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். எதிரே வந்த ரேபிடோ வாடகை காரின் ஓட்டுனர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். விபத்து காரணமாக பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் ஏஆர் ரகுமானின் ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.
நெட்டிசன்கள் கேள்வி
அதே நேரத்தில் ஒரே இடத்தில் விபத்தில் சிக்கியவர்கள் பணக்காரருக்கு மட்டும் காவேரி மருத்துவமனை, ஏழை டிரைவருக்கு அரசு மருத்துவமனையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விபத்தில் சிக்கியவுடன் பணம் இருக்கும் நபருக்கு உயர்தர ஆம்புலன்ஸும், பணம் இல்லாத நபருக்கு அரசு ஆம்புலன்ஸ் வந்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications
