முக்காலா முக்காபுலாவை மறக்க முடியுமா? 25 வருடம் கழித்து இணையும் ரஹ்மான் & பிரபுதேவா கூட்டணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானும் பிரபுதேவாவும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மூன் வாக் படத்திற்காக மீண்டும் இணைய உள்ளனர் என்பதால் இருவரது ரசிகர்களும் உற்சாக மழையில் நனையத் தொடங்கியுள்ளனர்.

கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதலன். அந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்தார். அதில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். படத்தில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் இன்று வரை பிரபலம். இந்தப் படம் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் திரை இசை வாழ்க்கையில் மறக்கமுடியாத திரைப்படம். இதில் வெளியான அனைத்து பாடல்களும் திரையிசை ரசிகர்களை கிறங்கடித்திருந்தது. குறிப்பாக 'ஊர்வசி ஊர்வசி' என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ரஹ்மானைக் கொண்டு போய் சேர்த்ததுடன் பிரபுதேவாவுக்கு ஒரு வெளிச்சத்தைத் தேடித் தந்தது. 'முக்காலா முக்காபுலா' பாடலில் நடனமாடிய பிரபுதேவா தமிழ் சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்பட்டார்.

AR Rahman

தமிழில் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படம் பிரேமிக்குடு என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியானது. ஹம்சே ஹாய் முக்காபுலா என இந்தியில் வெளியானது. இதில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை நக்மா ஃபிலிம்பேர் விருதுக்கு தேர்வானார்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் அடையாள சின்னமாக விளங்கி வரும் காதலனை அடுத்து இந்த இசைக் கூட்டணி காதலன், மின்சார கனவு, ஜென்டில்மேன், லவ் பேர்ட்ஸ் ஆகிய படங்களில் தொடர்ந்து பல ஹிட்டுகளை கொடுத்து வந்தது.

அதன்பின்னர் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கும் அளவுக்கு உச்சத்திற்குப் போனார் பிரபுதேவா. அந்தப் புகழ் இறுதியாக நயன்தாரா காதல் வரை கொண்டு சென்றது. இருவரும் பாலிவுட் பட உலகில் காதல் ஜோடியாக வலம் வந்தனர். பத்திரிகைகள் இந்த ஜோடியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதினர்.

அதன்பின்னர் நயன்தாரா தனது கையில் பிரபுதேவா பெயரைப் பச்சை குத்தும் அளவுக்குப் போனார். அது ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. இந்தப் பரபரப்புக்கு இடையில் பிரபுதேவா மற்றும் ரஹ்மான் கூட்டணி இணைந்து தமிழில் வேலை செய்யவே இல்லை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இருவரும் மீண்டும் இணைய உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. 'மூன் வாக்' என்ற படத்தைத் தயாரிக்க உள்ளதாக பிஹைண்ட்வுட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தங்கள் நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் காலடி எடுத்து வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிரபுதேவாவும் ரஹ்மானும் இணைய உள்ளனர்.

படத்திற்கு முதற்கட்டமாக #ARRPD6 என்ற டம்மி டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அதற்கு 'மூன் வாக்' என அதிகாரப்பூர்வமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஹ்மானும் பிரபுதேவாவும் 25 ஆண்டுகள் கழித்து இணைவதால் இவர்களது ரசிகர்கள் 90களின் நினைவில் மூழ்கிப் போய் உள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பு மைக்கேல் ஜாக்சனுடன் தொடர்புடையதாக உள்ளது. அவரது The First Moonwalk உலக அளவில் மிகப்பிரபலம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தத் தலைப்பைப் படக்குழு தேர்வு செய்துள்ளது. மேலும் படம் நடனத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும் என்றும் தெரியவருகிறது.

படத்தில் யோகி பாபு, நிஷ்மா மற்றும் சுஷ்மிதா போன்ற பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளனர். இப்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இது 2025 ஆம் ஆண்டில் பிரமாண்டமான பான்-இந்திய திரைப்படமாக வெளியாகும் எனத் தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது. படத்தை மனோஜ் என்எஸ் இயக்கியுள்ளார்.அனூப் விஎஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டராக பணியாற்றுகிறார்.

மூன் வாக் தமிழ் சினிமாவின் 25 ஆண்டுகால இடைவெளியை நிரப்புமா? ரசிகர்களின் பசிக்கு ஏற்ற தீனியைப் போடுமா? என்பது படம் வெளியான பிறகே தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+