இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தாயார் கரீமா பேகம் காலமானார்... மகன் வளர்ச்சியில் அரும்பங்காற்றிய அன்னை..!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலகம் போற்றும் உன்னத கலைஞராக உருவெடுத்திருக்கிறார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவரது தாயார் கரீமா பேகம் தான் முழு முதற் துணையாக நின்றார்.

பக்கபலம்
ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்பக்கால வளர்ச்சியில் அரும் பங்காற்றியவர் அவரது அம்மா கரீமா பேகம் என்று சொன்னால் அது மிகையாகாது. ரஹ்மானின் தந்தை இறந்த தருணத்தில் குடும்பத்தில் பெரியளவு வருமானம் இல்லாத சூழலிலும் ஏ.ஆர். ரஹ்மான் அவரது விருப்பம் போல் இசையமைப்பாளராக பக்கபலமாக நின்றார் கரீமா பேகம்.

பரிவும், பாசமும்
நபிகள் நாயகத்தின் போதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்றால் அது ''தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது'' என்பதாகும். அன்னைக்கு பணிவிடை செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி நபிகளார் கூறிய அமுத மொழிக்கேற்ப ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாயாரிடம் மிகுந்த பரிவும், பாசமும் காட்டி வந்தார்.

முக மலர்ச்சி
தாயார் கரீமா பேகத்தை பல முறை ஹஜ் செய்வதற்காக மெக்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தனக்கு ஆயிரம் நெருக்கடிகளும், பணிச்சுமையும் இருப்பினும் கூட தாயின் முகத்தை கண்டபோதெல்லாம் முக மலர்ச்சி கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இதனிடையே வயது மூப்பு காரணமாக, கரீமா பேகத்துக்கு கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

நல்லடக்கம்
இதற்கான சிகிச்சைகளை ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்ப மருத்துவர்கள் அளித்துள்ளனர். இருப்பினும் இயற்கையை வெல்ல யாரால் முடியும் என்பதற்கேற்ப ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்தின் உயிர் இன்று காலை பிரிந்தது. அவரது இறுதிச்சடங்கு இஸ்லாமிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications