Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வந்தே மாதரம் பாடலை அவ்வளவு அழகாக பாடிய வெளிநாட்டு பெண்.. ஸ்டன் ஆன ஏ.ஆர் ரஹ்மான்! வாவ் செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசைப்புயல் ஏர் ஆர் ரஹ்மானிடம் வெளிநாட்டு ரசிகை ஒருவர் வந்தே மாதரம் பாடலை பாடிக் காட்டிய வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.. கடந்த 1992இல் இயக்குநர் மணிரத்தினத்தின் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமான ஏர்.ஆர். ரஹ்மான் இன்றும் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார்.

 AR Rahman stunned to see a foreign lady singing Vande mataram

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு தொடங்கி ஹாலிவுட் படங்களிலும் ஏர்.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 2008இல் வெளியான ஸ்லம்டாக் மில்லியனயர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் ஏர்.ஆர். ரஹ்மான் பெற்றிருந்தார்.

ஏ.ஆர். ரஹ்மான்: கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படத்திற்கும் ரஹ்மான் தான் இசையமைத்து இருந்தார். ஆஸ்கர் நாயகனான ரஹ்மான் இப்போதும் தமிழில் லால் சலாம், தக் லைப் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படம் எனப் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது ஒவ்வொரு பாடலும் இந்தியாவைத் தாண்டியும் உலகெங்கும் கவனம் ஈர்க்கும் ஒன்றாக அமைகிறது.

இதற்கிடையே இவரது வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது வெளிநாட்டிற்குச் சென்று ஏர்.ஆர். ரஹ்மானை அவரது ரசிகை ஒருவர் சந்தித்துள்ளார். காரில் அமர்ந்திருந்த ரஹ்மானை சந்தித்த அந்த ரசிகை, "நீங்கள் தான் எனக்கு உத்வேகம் அளிக்கும் நபர்.. நான் உங்களின் தீவிர ரசிகை.. உங்களுக்காக நான் ஒரு பாடலை பாடலாமா..?' எனக் கேட்கிறார். அதற்கு ரஹ்மானும், "கண்டிப்பாகப் பாடுங்கள்" என்கிறார்.

வந்தே மாதரம்: உடனே அந்த ரசிகை 'வந்தே மாதரம்' பாடலை பாடினார். அவர் பாடுவதை ரசித்து கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் உடனே அதைத் தனது மொபைலிலும் வீடியோவாக எடுத்துக் கொள்கிறார். வெளிநாட்டு ரசிகை ஏர் ஆர் ரஹ்மானிடம் வந்தே மாதரம் பாடலை பாடியது இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை ஏர் ஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆன போது, அதை கொண்டாடும் வகையில் கடந்த 1997இல் வெளியானது தான் இந்த வந்தே மாதரம் பாடல்.. சோனி மியூசிக் நிறுவனம் இந்த பாடலை தயாரித்து இருந்தது. படங்களில் இல்லாத பாடல்களில் இப்போது வரை அதிகம் விற்பனையான பாடலாக இந்த வந்தே மாதரம் பாடல் இருக்கிறது. இந்த வந்தே மாதரம் பாடல் தாய்நாட்டின் சிறப்புகளையும், மூவர்ணக்கொடியின் சிறப்புகளையும் கொண்டாடும் பாடலாக இருக்கிறது.

அன்று சொன்ன ரஹ்மான்: இந்த ஆல்பத்தை நான் இந்தியாவின் வருங்கால சந்ததியினருக்கு அர்ப்பணிப்பதாகக் குறிப்பிட்ட ஏர் ஆர் ரஹ்மான், இந்த நாடு மனிதர்களின் மதிப்புகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.. அடுத்த தலைமுறையினரும் அதைப் பேண வேண்டும் என்றும் பாடல் வெளியான போது ஏர் ஆர் ரஹ்மான் கூறியிருந்தார். இப்போது சுமார் 23 ஆண்டுகள் கழித்து இதே வந்தே மாதரம் பாடலை வெளிநாட்டு ரசிகை ஒருவர் அவருக்காகப் பாடிக்காட்டி உள்ளார்.

ஏர் ஆர் ரஹ்மான் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்த நிலையில், அங்கே தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+