சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ் பரவுது.. வாழை பழத்தில் ஊசியை ஏற்றி.. கருத்தை வலிமையாக பதிவிட்ட ஏஆர் ரகுமான்!

இந்தி திணிப்புக்கு ஏஆர் ரகுமான் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தி திணிப்புக்கு எதிராக கருத்தை வலிமையாக பதிவிட்ட ஏ.ஆர் ரகுமான்!- வீடியோ

    சென்னை: இந்தா பிடி ஹிந்தியை.. என்று கட்டாயமாக திணிக்கப்படும் முயற்சிக்கு பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், வாழை பழத்தில் ஊசியைவிட்டு ஏற்றுவது போல ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியை கட்டாய பாடமாக்க மத்திய அரசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வரைவு தயாரிக்கும் பணியை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு மேற்கொண்டிருந்தது. அந்த பணி இப்போது முடிவடைந்து, கடந்த 31-ம் தேதியும் சமர்ப்பிக்கப்பட்டது.

     பரமக்குடியில் மண்ணை கவ்வ இவர்கள்தான் காரணமா.. 3 பேர் மீது திமுகவின் கோப பார்வை! பரமக்குடியில் மண்ணை கவ்வ இவர்கள்தான் காரணமா.. 3 பேர் மீது திமுகவின் கோப பார்வை!

    இணையதளம்

    இணையதளம்

    இது சம்பந்தமாக பொதுமக்களிடம் கருத்து கேட்கவும் https:\mhrd.gov.in என்ற இணையதளத்தில் அந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ளத்தான் இப்படி புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டதாகவும் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

    ஹேஷ்டேக்

    ஆனால் யாருமே இதனை வரவேற்றது போல தெரியவில்லை. பல்வேறு தரப்பில் இருந்து, பல்வேறு ரூபங்களில் எக்கச்சக்க கண்டனங்கள் வந்து குவிகின்றன. இதற்கான கண்டன ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது. இப்படித்தான் இசையமைப்பாளர் ரகுமானும் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    மரியான்

    மரியான்

    இவங்க இந்தியை திணிக்கிறாங்க.. அவங்க மும்மொழியை கொள்கையை கொண்டு வராங்க.. என்றெல்லாம் ஏஆர் ரகுமான் புலம்பவில்லை! அவர் பாணியிலேயே ஒரு பாட்டை பதிவிட்டு தன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அது மரியான் படத்தில் வரும் "இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால்தான் என்ன" என்ற பாட்டுதான்.

    அழகு தமிழ்

    அழகு தமிழ்

    ஆனால் இந்த பாட்டை ஒரு பஞ்சாபி தமிழ் மொழியில் பாடி உள்ளார். அந்த வீடியோவைதான் எடுத்து பதிவிட்டுள்ளார். சும்மா சொல்லக்கூடாது.. தலையில் டர்பன் உள்ளதே தவிர, அந்த பஞ்சாபி பாட்டை அவ்வளவு அழகாக பாடி இருக்கிறார். வடமாநிலத்தில் யார் தமிழில் பேசினாலும் அது இனிக்கவே செய்கிறது. இதன்மூலம் ரஹ்மான் என்ன சொல்ல வருகிறார் என்பது டெல்லி தலைவர்களுக்கு புரிந்திருக்கவே செய்யும்!

    English summary
    Music Director AR Rahman tweet about Tamil spreading even in Punjab
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X