Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்புமணிக்கு வந்த ஆவேசம்.. "பிரசவம் பார்ப்பது என்ன ரசம் வைக்கிற மாதிரியா?".. அட்வைஸ் பதிவு

யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த சம்பவத்திற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர்கள் லோகநாதன் - கோமதி தம்பதியினர்.. கோமதி சமீபத்தில் கர்ப்பமுற்ற நிலையில் அவருக்கு டெலிவரிக்கு டிசம்பர் 13ம் தேதி என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், பிரசவ நாளில் கோமதிக்கு பிரசவ வதி வரவில்லை.. டாக்டர் சொன்ன நாளிலிருந்து 5 நாள் தாமதமாகிவிட்டது.. அதாவது டிசம்பர் 18ம் தேதி கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது..

 பிரசவம்

பிரசவம்

எனினும் இவர்கள் டாக்டரிடம் செல்லாமல், லோகநாதனும் அவருடைய அக்காவும் யூடியூப் வீடியோ பார்த்து அதன்படி பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது... இதனால் குழந்தை இறந்து பிறந்ததாகவும், கோமதிக்கு ரத்தப்போக்கு அதிகமானதாகவும் தெரிகிறது... மேலும் கோமதி மயங்கி விழுந்து நிலையில், பதறிபோன லோகநாதன், உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றுள்ளார்.. பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்...

சிகிச்சை

சிகிச்சை

இப்போது கோமதிக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. அதேசமயம், குழந்தை இறப்பு குறித்து லோகநாதனிடம் நெமிலி போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.. மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் பிரசவம் நடக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் யூடியூப் பார்த்து குழந்தை பெற்றுக் கொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது.. இதனால் உயிரிழப்புகளும் அதிகமாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை தந்து வருகிறது.

 அன்புமணி

அன்புமணி

மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.. ஆனால் கோமதியின் நிலைமை சீரியஸாக இருக்கிறதாம்.. இதற்குதான் பாமகவின் அன்புமணி ராமதாஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.. பிரசவம் பார்ப்பது ரசம் வைப்பது போன்றோ, நூடுல்ஸ் செய்வது போன்றோ அல்ல என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

 அரக்கோணம்

அரக்கோணம்

"அரக்கோணம் மாவட்டம் (நகராட்சி) பனப்பாக்கத்தில் இளம்பெண்ணுக்கு அவரது கணவர் யூ-ட்யூப் பார்த்து பிரசவம் பார்த்ததாகவும், அதில் குழந்தை இறந்ததுடன், தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருப்பதாகவும் வெளியான செய்தியறிந்து வேதனை அடைந்தேன். மகப்பேறு என்பது மிகவும் சிக்கலான, சிறிய தவறு நடந்தாலும் தாய்க்கும், சேய்க்கும் உயிரிழப்பை ஏற்படுத்தி விடக் கூடிய விஷயமாகும். யூ-ட்யூபை பார்த்து கணவரே செய்வதற்கு அது ரசம் வைப்பதோ, நூடுல்ஸ் செய்வதோ அல்ல. மகப்பேறு விஷயத்தில் சாகச முயற்சிகள், விளையாட்டுகள் கூடாது..

மருத்துவமனை

மருத்துவமனை

நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 108 தொலைபேசியில் அழைத்தால் அவசர ஊர்தியில் வீட்டுக்கே வந்து பெண்ணை அழைத்துச் சென்று மகப்பேறு பார்த்து மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்து விடும் வசதியை நான் மத்திய அமைச்சராக இருந்த போதே ஏற்படுத்தியுள்ளேன்.. மருத்துவமனையில் மகப்பேறு பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு வேறு பல உதவிகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 விழிப்புணர்வு

விழிப்புணர்வு

மருத்துவமனையில் மருத்துவர்களால் செய்யப்படும் மகப்பேறு தான் பாதுகாப்பானது என்பதை உணர வேண்டும். யூ-ட்யூப் மூலம் மகப்பேறு பார்ப்பது ஒரு சாகசம் என்பது போன்ற விஷமப் பிரச்சாரம் சமூக ஊடகங்களில் செய்யப்படுகிறது. அவற்றை மக்கள் நம்பக் கூடாது. இது தொடர்பாக தமிழ்நாடு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று அன்புமணி ராமதாஸ் அதில் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+