ஆரணியை அடுத்த கிருஷ்ணாவரம் கிராமத்தில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மறுக்கிறார்கள்! MLA ஜெயசுதா பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கிருஷ்ணாவரம் கிராமத்தில் பெண் கொடுப்பதற்கோ பெண் எடுப்பதற்கோ மக்கள் தயங்குகிறார்கள் என சட்டசபையில் ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா கோரிக்கை வைத்த நிலையில் சிரிப்பலை எழுந்தது. அதிலும் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் குலுங்கி குலுங்கி சிரித்தார்.

தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. நேற்று காவல் துறை, வருவாய் துறை, பத்திரப்பதிவு துறை மீதான விவாதம் நடந்தது.

arani jayasudha

அப்போது ஆரணி தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமி காந்தன், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முள்ளன்டிரம் கிருஷ்ணாவம் கிரமத்திற்கு செல்லும் பாதையில் கிணறு உள்ளது. இதனால் சுடுகாடு வழியாக சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த சிக்கலால் கிருஷ்ணாவரம் கிராமத்தில் பெண் கொடுப்பதற்கோ, பெண் எடுப்பதற்கோ தயங்குகிறார்கள். எனவே அந்த கிணற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயசுதா கோரிக்கை விடுத்திருந்தார்.

அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், கூடிய விரைவில் அந்த ஊரில் பெண் கொடுத்து, பெண் எடுப்பதற்கான பணிகள் செய்து முடிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

arani jayasudha

உடனே ஜெயசுதா, கல்யாணம் நடப்பதற்கு வழி வகை செய்த அமைச்சருக்கு முள்ளன்டிரம் பகுதி மக்கள் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதற்கு பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் குபீரென சிரித்தார். இவர் செஞ்சி எம்எல்ஏவாக உள்ளார். ஆரணி எம்பி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

ஆரணியை சேர்ந்த ஜெயசுதா, போளூரில் பிறந்து வளர்ந்தவர். அவர் அதிமுகவில் 2011 ஆம் ஆண்டு போளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அது போல் 2016 ஆம் ஆண்டு அவருக்கு சீட் ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு போளூரில் இருந்து ஆரணி தொகுதிக்கு தன்னை வேட்பாளராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். அந்த வகையில் ஆரணி வேட்பாளராக ஜெயசுதா அறிவிக்கப்பட்டார்.

ஆரணி, அதிமுகவின் கோட்டை என்பதை ஜெயசுதா வெற்றி பெற்றதன் மூலம் நிரூபித்துவிட்டார்.

ஆரணி அரசு மருத்துவமனை, அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்யும் வசதி உள்ளிட்டவைகளை உருவாக்கித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இவர் மாற்றுக் கட்சி உறுப்பினராக இருந்தாலும் தனது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் அமைச்சர் என ரமேஷையும் பண்பான அமைச்சர் என அருண் ராஜையும் அழைத்து பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

arani jayasudha

சபாநாயகர் ஜேசிடி பிரபாகரனோ நேரம் முடிந்துவிட்டது என கூறியும் மூச்சுவிடாமல் அத்தனை கோரிக்கைகளையும் அவர் படித்து முடித்திருந்தார். ஆரணியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்திற்கு இவரை பார்க்க வரும் அரிசி, பட்டு வியாபாரிகள் உள்ளிட்டோர், "நீங்கள் எப்போதோ ஆரணிக்கு எம்எல்ஏவாக வந்திருந்தால் ஆரணி இன்னும் வளர்ச்சி அடைந்திருக்கும்" என பாராட்டி வருகிறார்கள்.

அத்துடன் போளூர் சட்டசபை உறுப்பினராக இருந்த போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். தற்போது ஆரணி தொகுதி எம்எல்ஏவாக தனது கோரிக்கையை திறம்பட வைக்கிறார். அதற்கு அமைச்சர்களும் செவி சாய்த்து நிச்சயம் செய்வதாக தெரிவிக்கிறார்கள்.

ஆரணி அரசு மருத்துவமனைக்கு தினமும் 1400 பேர் வந்து செல்கிறார்களாம். அங்குள்ள சாலை வசதியை சரி செய்து கொடுத்தால் அவசர சிகிச்சைக்கு வருவோரை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்ல ஏதுவாக இருக்கும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளார்.

அத்துடன் ஆரணி மருத்துவமனைக்கு வரும் மக்களிடம் மருத்துவமனை நிர்வாகம் ஓடிபி கேட்டதால் கொந்தளித்த ஜெயசுதா, "அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள் ஏழை எளியவர்கள், எழுத படிக்க தெரியாதவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ள அவர்களிடம் போய் ஓடிபி எண் கேட்டால் எப்படி கொடுப்பார்கள். முதலில் சிகிச்சை அளித்துவிட்டு பிறகு ஓடிபியை பார்த்துக் கொள்ளலாம்" என அங்கிருந்த மருத்துவரை கடிந்து கொண்டாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+