அறந்தாங்கியை தூக்கிய விஜயின் "தம்பி".. சின்ன வயதில் இருந்து கூடவே இருந்தாரே! யார் முகமது ஃபார்வாஸ்

Subscribe to Oneindia Tamil

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில், இதுவரை நிலவி வந்த பாரம்பரிய அரசியல் கணக்குகளை உடைத்தெறிந்துவிட்டு, இளம் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் முகமது ஃபார்வாஸ் (J. Mohamed Farvas).

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் (TVK): 107 இடங்கள்

திராவிட முன்னேற்றக் கழகம் (DMK): 72 இடங்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK): 56 இடங்கள்

இதில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டுவதில் சிறு பின்னடைவைச் சந்தித்துள்ளது.

Aranthangi Election Results 2026 TVK Candidate Mohamed Farvas Takes Massive Lead

தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் முகமது ஃபார்வாஸ்

இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், ஒவ்வொரு சுற்றும் தவெக (TVK) தொண்டர்களுக்கு மகிழ்ச்சி மழையை பொழிந்து வருகிறது. அறந்தாங்கி தொகுதியில் தற்போதைய நிலவரப்படி, முகமது ஃபார்வாஸ் 50,125 வாக்குகளைப் பெற்று, தனது கட்சித் தொண்டர்களையும், தொகுதி மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குறிப்பாக, இரண்டாம் இடத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை விட 11,610 வாக்குகள் முன்னிலையில் இருந்து, வெற்றிக் கோப்பையை நோக்கி மிக உறுதியாக நடைபோட்டு வருகிறார்.

யார் இந்த முகமது ஃபார்வாஸ்?

புதுக்கோட்டை மண்ணின் மைந்தனான 31 வயது இளம் வழக்கறிஞர் இவர். நேஷனல் லா ஸ்கூலில் (NLS) இளங்கலை மற்றும் சட்டப்படிப்பை (B.A., LL.B. Hons) முடித்துவிட்டு, அச்சகத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, கட்சியில் இணைந்தார். ஆனால் அதற்கு முன்பே விஜயுடன் நெருங்கி பல ரசிகர் மன்ற பணிகளை செய்து இருக்கிறார். இவரின் ரசிகர் மன்ற பணிகளே அவருக்கு விஜயுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

சுமார் 9.6 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவராக இருந்தாலும், மக்களோடு மக்களாக மிக எளிய முறையில் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் இன்று வாக்குகளாக மாறியுள்ளது. கிட்டத்தட்ட 12-15 வயதில் இருந்தே இவர் விஜயுடன் மிக நெருக்கமாக இருந்தார்.

விஜயுடன் ஆழமான பிணைப்பு

முகமது ஃபார்வாஸ், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர். விஜய் காட்டிய வழியில், தூய்மையான மற்றும் நேர்மையான அரசியலே எனது இலக்கு என்று ஒவ்வொரு மேடையிலும் அவர் முழங்கியது அறந்தாங்கி இளைஞர்களின் மத்தியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. விஜய் இவரைத் தேர்ந்தெடுத்த போதே, இது ஒரு மாற்றத்திற்கான விதை என அரசியல் விமர்சகர்கள் கருதினர்.

அந்த நம்பிக்கை இன்று 11,000-க்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையாக அறுவடை செய்யப்பட்டுள்ளது.

வரலாற்று வெற்றிக்குத் தயார்

காலங்காலமாகப் திராவிட - தேசிய கட்சிகளின் கோட்டையாக இருந்த அறந்தாங்கியில், ஒரு புதிய கட்சியின் வேட்பாளர் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இது வெறும் அரசியல் வெற்றி அல்ல; இது ஒரு தலைமுறை மாற்றத்திற்கான அறிகுறி. விஜய்க்கு மிகவும் நெருக்கமான தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் முகமது ஃபார்வாஸ் வெற்றி அந்த கட்சியின் இளம் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+