ஏங்க இவங்க மேயரா இல்லை எல்கேஜி குழந்தையா.. ஆன் தி ஸ்பாட்டில் பிரியா ராஜனை கலாய்த்த அறந்தாங்கி நிஷா
சென்னை: இவர் மேயரா இல்லை எல்கேஜி குழந்தையா என்றே தெரியவில்லை என பிரியா ராஜனை மேடையிலேயே அறந்தாங்கி நிஷா கலாய்த்து தள்ளியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா ராஜன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அறந்தாங்கி நிஷா, மேயர் பிரியாவை பாராட்டி பேசினார். அவர் பேசுகையில் இளமையிலேயே பிரியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.

அவரிடம் பேசும் போது சென்னை மேயரிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா, இல்லை எல்கேஜி குழந்தையிடம் பேசிக் கொண்டிருக்கிறேனா என தெரியவில்லை. அவ்வளவு அக்கறையோடு விசாரிக்கிறார்.
ஆண்கள் வெளியில் வரும்போது விமர்சனங்கள் வந்தால் அதை எளிதாக கடந்து போய்விடுவார்கள். ஆனால் பெண்கள் வெளியில் வரும் போது வைக்கப்படும் விமர்சனங்கள் அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும். ஆனால் எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் அதை ஒற்றை புன்னகையால் கடந்து செல்கிறார்.
இதற்காகவே மேயர் பிரியாவின் மன தைரியத்தை பாராட்டுகிறேன். நிறைய பெண்களுக்கு மேயர் பிரியா முன்மாதிரியாக திகழ்கிறார். இவ்வாறு அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார். இவர் விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டான்ட் அப் காமெடி செய்து வருகிறார்.
இவர் மாரி 2, ஆண் தேவதை, திருச்சிற்றம்பலம், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா, மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். அவருக்கு சகோதரனாக இருந்து உதவியவர் ஈரோடு மகேஷ் என ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவர் கூறியுள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கூட விபத்தில் தன்னுடன் சிக்கிய குழந்தைக்கு ஓடி வந்து உதவியவர் ஈரோடு மகேஷ் என கூறி அவருக்கு தாய்மாமனுக்கு உண்டான சீரை செய்து கவுரவித்தார் நிஷா. இவர் குக் வித் கோமாளியிலும் கலந்து கொண்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் நிறைய மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அது போல் திமுகவை சேர்ந்த பிரியா ராஜனின் தந்தை பாரம்பரிய திமுக குடும்பத்தினர். சிறிய வயதில் இத்தனை பெரிய பதவியை முதல்வர் தருகிறாரே என சிலர் அங்கலாய்த்தார்களாம். ஆனாலும் பிரியா ராஜன் தற்போது சிங்கார சென்னை 2.ஓ திட்டத்திற்கு நல்லதொரு பங்களிப்பை அளித்து வருகிறார். அத்துடன் மழை, வெள்ளம் காலங்களிலும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications