மோடியின் நண்பர்.. அதானியை காக்க திமுக அரசு திட்டமா? நிலக்கரி ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை: நிலக்கரி கொள்முதல் ஊழலில் அதானியை காப்பாற்ற திமுக அரசு திட்டமிடுகிறதா என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2012 முதல் 2016 வரை 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் ரூ.6066 கோடி அளவிற்கு ஊழல் நடந்தது என்று அறப்போர் இயக்கம் 2018 இல் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தது.

மிக முக்கியமாக பாதிக்கு பாதி நிலக்கரி இறக்குமதி அதாவது 1.19 கோடி மெட்ரிக் டன் அதானியால் மட்டும் இறக்குமதி செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3000 கோடி ஊழல் அதானி நிறுவனம் செய்தது. ஒரே மாதத்தில் வாங்கப்பட்ட ஒரே தரம் நிலக்கரிக்கு TNPL கொள்முதல் விலையை விடவும், அதே போல் சந்தை மதிப்பை விடவும் அதானி மற்றும் சிலரிடம் இருந்து எப்படி ஒரு மெட்ரிக் டன்னுக்கு $20 அதிகமாக மின்சார வாரியம் கொள்முதல் செய்தது என்பதற்கான ஆதாரங்களை அறப்போர் சமர்பித்து உள்ளது.
ஒரு சிலர் மட்டும் பங்கெடுக்கும் வண்ணம் டெண்டர் விதிகளை எப்படி மின்சார வாரியம் மாற்றியது என்பதற்கான ஆதாரங்களும் தரமில்லாத நிலக்கரி கொண்டு வந்ததை CAG கண்டுபிடித்த ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் அதானி மீது நடவடிக்கை எடுக்க பயந்தார்கள். FIR போடப்படவில்லை. திமுக ஆட்சி வந்தவுடன் கடந்த 2 ஆண்டுகளாக அறப்போர் இயக்கம் தொடர்ந்து கடிதம் அனுப்பியதால் விசாரணையை துவங்க லஞ்ச ஒழிப்பு துறை ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17 கீழ் அரசிடம் அனுமதி கோரி உள்ளது. சட்டப்படி 3 மாதத்திற்குள் கொடுக்க வேண்டிய அனுமதியை 7 மாதங்கள் ஆகியும் தராமல் திமுக அரசு இழுத்தடிக்கிறது. அதானியை காப்பாற்ற திமுக அரசில் யார் முயற்சி செய்கிறார்கள்?
அதானியின் நண்பர் பிரதமர் மோடி என்பதால் தயக்கமா? இந்த புகாரில் அப்போதைய அதிகாரிகள், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதானி மற்றும் மற்றவர்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்யப்பட வேண்டும் . முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் தருவாரா? உடனடியாக விசாரணை நடத்த அனுமதி தருமா தமிழ்நாடு அரசு?" என்று குறிப்பிட்டு உள்ளது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications