தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்.. இவருக்கு கிடைத்த 2 சிறப்புகள்!
சென்னை: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. இவர் தான் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி ஆவார். இவர் தற்போது தமிழ்நாடு அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்க துறையின் செயலாளராக இருந்து வருகிறார்.
முன்னதாக அண்மைக் காலம் வரை தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சத்ய பிரதா சாகு, கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெற்றுள்ளார்.

அர்ச்சனா பட்நாயக் தற்போது தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளர் ஆக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்தார். முன்னதாக ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக் கடந்த 2002ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகரியாக தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட கலெக்டராக பணியாற்றியிருக்கிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையும் அர்ச்சனா பட்நாயக்குத்தான் உள்ளது. கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவ தமிழக அரசால் அனுப்பப்பட்ட குழுவில் அர்ச்சனா பட்நாயக்தான் இடம் பெற்றிருந்தார். அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தான் தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து 2026 சட்டசபை தேர்தலை நடத்த போகிறார்..
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications