ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி! திமுகவின் சூப்பர் சீனியர் ஹெல்த்துக்கு என்னாச்சு?
சென்னை: திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரும், அக்கட்சியின் முன்னாள் பொருளாளருமான ஆற்காடு வீராசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பல மாதங்களாகவே வயதுமூப்பின் காரணமாக ஆற்காடு வீராசாமி வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது அவர் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதனிடையே மருத்துவமனை செட்-அப்பில் கட்டில் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் கேர் டேக்கர்களும் வீட்டிலேயே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆற்காடு வீராசாமியின் மகனும் வடசென்னை மக்களவை தொகுதி உறுப்பினருமான கலாநிதி வீராசாமி மருத்துவர் என்பதால் அவரே அவரது தந்தையை கவனித்துகொள்கிறார். இந்நிலையில் ஆற்காடு வீராசாமியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அவ்வப்போது திமுக நிர்வாகிகள் சிலர் அவரது இல்லத்துக்கு சென்று வருவார்கள். முதலமைச்சர் ஸ்டாலினே பல முறை நேரில் சென்று ஆற்காடு வீராசாமி உடல்நலம் பற்றி கேட்டறிந்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று திடீரென ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆற்காட்டார் ஹெல்த்துக்கு என்னாச்சு என பலரும் விவாதித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதனிடையே ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி அவரது மகனும், வடசென்னை மக்களவை தொகுதி உறுப்பினருமான கலாநிதி வீராசாமியை ஒன் இந்தியா தமிழ் தொடர்பு கொண்டு பேசிய போது, கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் மற்றபடி பயப்பட எதுவுமில்லை எனவும் தெரிவித்தார்.
ஆற்காடு வீராசாமி ஆக்டிவாக இருந்த வரை கருணாநிதியின் வலதுகரமாக செயல்பட்டவர் என்பதும் திமுகவில் மிக முக்கிய பிரமுகராக வலம் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications