பாமக யூஸ் இல்லை.. அதிமுகவின் "பகிரங்க" பிளான்.. விசிகவை வளைத்து.. அப்போ திமுக? சங்கதியே வேறயாமே!

சில நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு வழக்கில் வென்றதற்கு திருமா வாழ்த்து தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார் அதிமுக மாஜி செல்லூர் ராஜு. விசிக எம்பி திருமாவளவனின் தொடர் பேச்சுக்கள் காரணமாக அவர் அதிமுகவுடன் நெருக்குகிறாரோ என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில்தான் செல்லூர் ராஜு இப்படி கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் அதிமுகவின் பிளான் என்ன என்று ரத்தத்தின் ரத்தங்களிடம் விசாரித்தோம்.

கடந்த சில நாட்களாகவே கூட்டணி குறித்த பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார் திருமாவளவன். சமீபத்தில் பாமக - திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் , அதேபோல் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்தார். சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமா இதை தெரிவித்தார்.

அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம்.

விசிக திமுக

விசிக திமுக

அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம். இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா?, தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம். நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா? ஓட ஓட விரட்டி அடிப்போம், என்று கூறினார். திமுக - பாமக நெருக்கம் ஆகி வருவதாக செய்திகள் வந்த நிலையில்தான் திருமா இப்படி கூறினார். அதாவது திமுகவிற்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பது போல அவரின் பேச்சு இருந்தது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

சில நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு வழக்கில் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். முத்தாய்ப்பாக நேற்று பாஜக அதிமுக கூட்டணி குறித்து திருமா வெளிப்படையாக பேச தொடங்கினார்.அதில், திமுக முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றிபெற பாஜக முயற்சி செய்கிறது. அதிமுக இல்லாமல் தனித்து போட்டியிட பாஜகவிற்கு தைரியம் இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார் அதிமுக மாஜி செல்லூர் ராஜு.

கூட்டணி

கூட்டணி

இதனால் இங்கே அதிமுக - விசிக கூட்டணி உருவாகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ரத்தத்தின் ரத்தங்கள், அரசியல் விமர்சகர்கள் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு.. பாமக கூட்டணி - அதிமுக பாமக கூட்டணியை விரும்பவில்லை. பாமக காரணமாக தங்களுக்கு பெரிதாக வாக்குகள் வரவில்லை. 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தும், பாமக கூட்டணியில் இருந்தும் அவர்கள் நமக்கு வாக்கு அளிக்கவில்லை. அதனால் பாமக வேண்டாம் என்ற நிலைப்பட்டால் அதிமுக இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக

திமுக

ஆனால் விசிக வாக்குகள் அப்படியே அதன் கூட்டணி கட்சிக்கு சென்றுள்ளது. எனவே விசிக நம்முடன் இருந்தால் அதிமுக அதிக இடங்களில் வெல்ல முடியும் என்று அதிமுக நினைக்கிறதாம். அதாவது மெகா கூட்டணி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி முன்பே கூறி இருந்தார். அந்த கூட்டணியை அமைக்க எடப்பாடி திட்டமிட்டு வருகிறாராம். ஜெயலலிதா முன்பு உருவாக்கிய கூட்டணி போல விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு செயல்பட எடப்பாடி திட்டமிட்டு இருக்கிறாராம். இதன் காரணமாவே விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார் அதிமுக மாஜி செல்லூர் ராஜு என்கிறார்கள்.

பாஜக

பாஜக

பாஜக அதிமுக இடையே தற்போது கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு தரப்பு தலைவர்களும் மாறி மாறி தாக்கிக்கொள்கிறார்கள். பாஜகவோடு மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பாஜகவை கழற்றிவிட்டால் விசிக தங்களுடன் வரும் என்று அதிமுக நினைக்கிறதாம். ஆனால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணம் விசிகவிற்கு கிடையாவே கிடையாது. ஆனால் அதிமுகவுடன் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொண்டால் திமுக கூட்டணியில் நமக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நம்மை பிடித்து இழுக்க தொடங்குவார்கள். 2024 லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. அப்போதுதான் தேர்தலில் அதிக இடங்களை பெறலாம் என்றும் விசிக நினைக்கிறதாம். சமீபத்தில் திருமாவும் பேட்டி ஒன்றில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம் என்றே கூறியுள்ளார். பாமக, பாஜக வந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று திருமா சொன்னது, அவரின் கொள்கை நிலைப்பாட்டை காட்டுகிறது. அதே சமயம் சில தலித் தொடர்பான விவகாரங்களில் திமுக - விசிக இடையே கொஞ்சம் கருத்து வேறுபாடு உள்ளது. பாமகவும் வந்தால் இது மோதலாக மாறும் என்பதால் திருமா இதை எச்சரிக்கை போல தெரிவித்துள்ளார் என்கிறார்கள். பாஜக - அதிமுக கூட்டணி உடைந்தால் பாஜக தனித்து விடப்படும். தனது கொள்கைக்கு கிடைத்த நற்செய்தியாக இது இருக்கும் என்பதால் திருமா இப்படி பேச தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மற்றபடி கூட்டணியில் இருந்து வெளியேறும் எண்ணம் எல்லாம் இல்லை. விசிக கூட்டணியை உடைக்கும் எண்ணத்தில் இல்லை, அதனால் இப்போதைக்கு கூட்டணியில் பெரிய மாற்றம் இருக்காது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+