"டோன்" மாறுதே.. வார்த்தையை விட்ட எடப்பாடி! விஷயம் தெரிந்த மறுநொடியே.. அமித் ஷா போட்ட "சுளீர்" ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமித் ஷா குறித்து எடப்பாடி பழனிசாமி விட்ட ஸ்டேட்மென்ட் ஒன்று தேசிய அளவில் பாஜக தலைவர்களை அப்செட் ஆக்கி உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலில் எது அவசியமோ இல்லையோ.. பொறுமை மிக அவசியம் என்பார்கள். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் பொறுமை இழந்து பேசிய சிலர் வார்த்தைகள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஞ்சம் அப்செட் ஆகி.. எடப்பாடி விட்ட வார்த்தைகள் அவருக்கே எதிராக திரும்பி உள்ளன. அப்படி நடந்தது என்ன? அவர் சொன்னது என்ன?

அமித் ஷா

அமித் ஷா

உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் சனிக்கிழமை சென்னை வந்தார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார். இந்த நிலையில் அவரை தனியாக சந்திக்க ஓ பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் இதற்கு அனுமதி தரப்படவில்லை. மாறாக அந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதில் அமித் ஷாவை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் அவருக்கு கை கொடுத்தார். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

எடப்பாடி

எடப்பாடி

அமித் ஷாவை தனியாக சந்திக்க அனுமதிக்கவில்லை என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தை புறக்கணித்தார் என்று கூறப்பட்டது. அதேபோல் முதல்நாள் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து இருந்தார். அப்போது பிரதமர் மோடி ஓபிஎஸ், எடப்பாடி இருவரையும் ஒன்றாக சந்தித்தார். இவர்களுக்கு ஒன்றாக மரியாதையை கொடுத்தார். ஓ பன்னீர்செல்வத்துடன் தன்னை சேர்த்து வைத்து ஒரே மாதிரி நடத்தியதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அமித் ஷாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி முக்கியமான ஸ்டேட்மென்ட் ஒன்றை கொடுத்ததாக தெரிகிறது.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம்.. சென்னை வந்த அமித் ஷாவை ஏன் சந்திக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு காட்டமாக பதில் அளித்த எடப்பாடி, அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

கோபம்

கோபம்

மத்திய அமைச்சர் அமித் ஷா வரும்போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது தமிழக பாஜகவை மட்டுமல்ல ; பாஜகவின் தேசியத் தலைவர்களைக்கூட கோபப்பட வைத்திருக்கிறதாம். எடப்பாடியின் அந்த சொல்லாடல் அமித் ஷாவுக்கு தெரிந்து ஜஸ்ட் லைக் தட் என்றளவில் கடந்து போயிருக்கிறாராம். ஆனால், பாஜகவின் தேசிய தலைமையிடமிருந்து டி.டி.வி.தினகரனுக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, நீங்களும் ஓபிஎஸ்சும் நெருங்கி வரவேண்டும் என்பதே அந்த தகவல். நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வர வேண்டும் என்று தகவல் சொல்லப்பட்டு உள்ளது.

கூட்டணி

கூட்டணி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கிறதோ இல்லையோ பாஜக கூட்டணியில் டி.டி.வி. இருப்பார் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விசயம். அதனால், அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான், நீங்களும் ஓபிஎஸ்சும் நெருங்கி வரவேண்டும் என்று உத்தரவு போடப்பட்டதாம். இதனையடுத்துதான், எடப்பாடிக்கு எதிராக காட்டமாக பேட்டியளித்த தினகரன, ஓபிஎஸ்சை சந்திப்பேன் என்று அழுத்தமாகச் சொன்னார். ஓபிஎஸ், டிடிவி, சசிகலா மூவரையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து நிறுத்தி எடப்பாடியை தனிமைப்படுத்துவதுதான் பாஜக தேசிய தலைமை திட்டமிடுகிறது என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.

அமித் ஷா

அமித் ஷா

அமித் ஷாவை சந்திக்க அவசியமில்லை என எடப்பாடி சொன்னதற்கு பிறகே இந்த திட்டம் குறித்து டெல்லியில் சீரியசாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள் தேசிய தலைமையோடு தொடர்புடைய தமிழக பாஜகவின் சீனியர் நிர்வாகிகள். இதனால் ஓ பன்னீர்செல்வமும் செம மகிழ்ச்சியில் இருக்கிறாராம். அதனால்தான்.. டிடிவி தினகரனை சந்திக்க நானும் தயார் என்று ஓ பன்னீர்செல்வமும் கூறி இருக்கிறாராம். விரைவில் இவர்களின் சந்திப்பு நடக்க உள்ளதாம். அதற்கான ஏற்பாடுகளை ஓ பன்னீர்செல்வம் அணியில் உள்ள மூத்த நிர்வாகி செய்து வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+