எடப்பாடி + அமித் ஷா.. இணைந்து போட்ட மெகா திட்டம்.. உள்ளே நுழைந்த சீமான்.. திமுக அஸ்திவாரம் ஆடுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார்.

Are Amit Shah Edappadi Palanisamy planning to bring Seeman Naam Tamilar into the BJP AIADMK alliance

கூட்டணி உருவாகியது

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு பக்கம் உருவாகி உள்ள நிலையில்.. இன்னொரு பக்கம் பாஜக - அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இழுப்பதற்கான முன்னெடுப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு இடையேதான் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் பரவின. அதேபோல், சென்னையில் தங்கியுள்ள நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இதை சீமான் மறுத்துள்ளார். நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று சீமான் மறுத்துள்ளார். இதுவும் கூட பாஜக - நாம் தமிழர் கூட்டணி பற்றிய விவாதங்களை அதிகரித்து உள்ளது.

Take a Poll

சீமான் ஏன் முக்கியம்

இப்போது இந்த நிலவரப்படி பார்த்தல் தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம்.. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை. எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர்தான்.

நாம் தமிழர் இதில் கேம் சேஞ்சர் ஆக முடியும். ஏனென்றால் அவர்களிடம் 8-10 சதவிகிதம் வாக்குகள் உள்ளன. நாம் தமிழர் தனியாக நின்றால் 4 முனை போட்டி உருவாகி வாக்குகள் பிரியும். எதிரணி வாக்குகள் பிரிந்தால் அது திமுகவிற்கு சாதகம். அதிமுக - பாஜக கூட்டணிக்கு சென்றால்.. அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க கூட சாதகமான சூழல் ஏற்படும். அதுவே விஜய் கூட்டணிக்கு போனால்.. விஜய் - சீமான் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்று... தேமுதிக ஒரு 2011ல் திமுகவை எதிர்க்கட்சி சீட்டில் இருந்து அகற்றியது போல.. அதிமுகவை எதிர்க்கட்சி கூட ஆக விடாமல் செய்ய முடியும். சீமான் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே களம் மாறுபடும். பெரியார் விவகாரம், பெண் பலாத்கார வழக்கு காரணமாக தற்போது முடங்கி உள்ள சீமான் மீண்டும் ஆக்டிவ் ஆகும் பட்சத்தில் அது பெரிய வாக்கு வங்கி மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

பாஜக பிளான்

அதிமுக - பாஜக கூட்டணியில் சீமானை இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறதாம். பாஜகவின் ஒரு லாபி இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறதாம். அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜக கிட்டத்தட்ட 100+ இடங்களை பெற திட்டமிட்டு உள்ளதாம். ஆம்.. அதாவது 100+ இடங்களை பெற்றுவிட்டு அதில் சிலவற்றை தனது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். அதாவது அதிமுக சில இடங்களை கூட்டணி கட்சிக்கு கொடுத்தால்.. பாஜகவும் கூடுதல் இடங்களை வாங்கி அதை டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம்.

அதாவது கூட்டணியிலேயே உள் கூட்டணி கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் எடப்பாடியிடம் தினகரன், ஓ பன்னீர்செல்வத்தை சேருங்கள் என்ற கோரிக்கையை பாஜக வைக்க வேண்டியது இருக்காது. தேமுதிக, பாமக, புதிய தமிழகம் தொடங்கி இன்னும் சில உதிரி கட்சிகள் என்று பெரிய கூட்டணி லிஸ்ட் அமித் ஷா கையில் உள்ளதாம். இந்த லிஸ்டில் நாம் தமிழர் பெயரும் உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவர்களுடன் நாம் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும். அதற்கான பணிகளை நாங்கள் செய்கிறோம். இவர்கள் யாருடனும் மோதல் மட்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அமித் ஷா கூறி உள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+